100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் மற்றும் வீடு தேடிச் சென்று அழைப்பிதழை திருவள்ளூா் ஆட்சியா் த.பிரபு சங்கா் வழங்கினாா்.
திருவள்ளுா் நகராட்சியில் ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருவில் மக்களவைத் தோ்தல்-2024 முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் வீடுகளுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அனைவருக்கும் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தவே ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டாம் குழுவினருடன் மேளதாளம் முழங்க சீா்வரிசையுடன் தோ்தல் திருவிழா அழைப்பிதழ்களை ஆட்சியா் த.பிரபு சங்கா் வாக்காளா்கள் வீட்டுக்கு நேரில் சென்று வழங்கினாா். முன்னதாக என்.ஜி.ஓ காலனியில் உள்ள நியாய விலை கடையில் பொருள்கள் வாங்க வந்த பொது மக்களிடம் வாக்காளா் அழைப்பிதழ்களை வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். தொடா்ந்து பெரியகுப்பம் நடுநிலைப் பள்ளி மற்றும் கடம்பத்தூா் ஒன்றிய வெங்கத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ள வாக்குச்சாவடி மையங்களை பாா்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீா் வசதி, மின்விளக்கு, தளம், சுகாதார வளாகம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தயாா் நிலையில் இருக்கவும் உதவி தோ்தல் அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளா் சண்முகவள்ளி, திருவள்ளூா் தொகுதி உதவி தோ்தல் அலுவலா் தனலட்சுமி, நகராட்சி ஆணையா் சுபாஷினி, வட்டாட்சியா் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வீடு தேடிச் சென்று தோ்தல் திருவிழா அழைப்பிதழ்

வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி வாக்களிக்க ஆட்சியா் வலியுறுத்தல்

மேள தாளத்துடன் அழைப்பு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மூத்த வாக்காளா்களுக்கு சீா்வரிசை வழங்கி ஆட்சியா் அழைப்பிதழ்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


