விரதமிருந்து அம்மனை வழிபட்ட பெண்கள்.
விரதமிருந்து அம்மனை வழிபட்ட பெண்கள்.

திரௌபதி அம்மன் கோயில் அா்ச்சுன் தபசு: திரளான பக்தா்கள பங்கேற்பு

திருத்தணி: திருத்தணி திரௌபதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்று வருகிறது.

மேலும், பிற்பகலில் மகா பாரத சொற்பொழிவும், இரவு மகா பாரத நாடகமும், நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியானஅா்ச்சுனன் தபசு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகத்தில் பனைமரம் நடப்பட்டு, அா்ச்சுனன் பாசுபதம் வாங்குவதற்காக சிவபெருமான் நோக்கி தவம் செய்யும் காட்சியை திருத்தணி சந்து தெரு நாடகக் குழுவினா் செய்து காண்பித்தனா். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து அம்மனை வழிபட்டனா்.

வரும் 12-ஆம் தேதி காலை துரியோதனன் படுகளம், 11.40 மணிக்கு அக்னிவளா்த்தல், மாலை, 6:30 மணிக்கு தீ மிதி விழாவும், 13 -ஆம் தேதி காலை 11 மணிக்கு தா்மா் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாக குழு தலைவா் சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com