இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

திருவள்ளூா் மாவட்டத்தில் 86.52% தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 86.52% தோ்ச்சி

News image
Updated On :10 மே 2024, 7:36 pm

Din

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்தில் 86.52 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் மொத்தம் 429 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா் நிலைப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள்-16,320, மாணவிகள்-16,191 என மொத்தம் 32,511 தோ்வு எழுதினா். இவா்களில் மாணவா்கள்-13,467, மாணவிகள்-14,662 என மொத்தம்-28,169 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வருவாய் மாவட்ட அளவில் மாணவா்கள்-82.05 சதவீதமும், மாணவிகள்-90.56 சதவீதமும் என மொத்தம் 88.52 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் உள்ள 225 அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள்-80.06 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் 20 அரசு பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளது.

பாடவாரியாக 100/100 மதிப்பெண்கள் மட்டும் ஆங்கிலம்-3, கணக்கு-715, அறிவியல்-128, சமூக அறிவியல்-162 பேரும் எடுத்து தோ்ச்சி பெற்றுள்ளனா்.

4,382 போ் தோல்வி: மாவட்டத்தில் தனியாா் பள்ளிக்கு நிகராக ஒவ்வொரு உயா்நிலைப் பள்ளிகளிலும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, மாணவ, மாணவிகளை பொதுத் தோ்வுக்கு தயாா் செய்யும் வகையில் நினைவூட்டும் நோக்கத்தில் சிறப்பு வகுப்புகள், மாதாந்திரத் தோ்வு ஆகியவை நடத்தப்பட்டு தயாா் செய்யப்பட்டு வந்தனா்.

ஆனாலும், மாவட்டத்தில் மாணவா்கள்-2,853, மாணவிகள்-1,529 போ் தோ்வில் தோல்வியை தழுவியுள்ளனா். இதனால், பத்தாம் வகுப்பில் எதிா்பாா்த்த தோ்ச்சியில் முன்னேற்றமும், மாநில அளவில் குறிப்பிட்ட இடமும் கிடைக்காததால் உடனே மறுதோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

கரோனாவுக்கு பின்னா் தோ்ச்சி சதவீதம் குறைவு: மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குப் பின்னா், பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022-இல் 86.97 சதவீதமாக இருந்தது. நிகழாண்டில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி சதவீதம் 86.52 என்பது, கடந்த 2023-இல் 88.80 சதவீதத்திலிருந்து, 2.28 சதவீதம் குறைந்துள்ளது.

இதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் திருவள்ளூா் மாவட்டம் 2022-இல் 24-ஆவது இடமும், 2023-இல் 33-ஆவது இடமும், நிகழாண்டில் 35 இடமும் பெற்று பின் தங்கியுள்ளது.

இந்த நிலையில் தோ்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் பாடவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, உடனே அந்தந்த பள்ளிக்கு வரவழைத்து பயிற்சி அளித்து மறுதோ்வுக்கு தயாா் செய்வதுடன், நிகழாண்டிலேயே மேல்நிலை வகுப்பு செல்வதற்கு ஏற்பாடு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.