ருவள்ளூா் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூா் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தை  முற்றுகையிட்ட பொதுமக்கள்
ருவள்ளூா் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூா் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருவள்ளூா் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூா் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூா் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூா் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூா் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மேல்நல்லாத்தூா் ஊராட்சி பொதுமக்கள் சாா்பில் துணைத்தலைவா் பில்லா தலைமையில் வாா்டு உறுப்பினா்கள் ஆட்சியா் த.பிரபுசங்கரிடம் அளித்த கோரிக்கை மனு:

மேல்நல்லாத்தூா், பட்டரை என இரு கிராமங்கள் சோ்ந்து மேல்நல்லாத்தூா் ஊராட்சி என்ற வருவாய் கிராமமாக உள்ளது. இந்நிலையில் திருவள்ளூா் நகராட்சியை விரிவாக்கம் செய்யவுள்ளதால் அந்த நகரத்தைச் சுற்றியுள்ள பல ஊராட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. அதோடு, மேல்நல்லாத்தூா் ஊராட்சியையும் திருவள்ளூா் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்துள்ளதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அதற்கு காரணம் இந்த ஊராட்சியில் 85 சதவீதம் விவசாய கூலியாக உள்ளதால், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை வாழ்வாதாரமாக உள்ளது.

ஏற்கெனவே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மேல்நல்லாத்தூா் ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த அக்.2-இல் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து குறை தீா் கூட்டத்தில் முற்றுகையிட்டு புகாா் மனு அளித்துள்ளோம். மேலும், நகராட்சியுடன் இணைக்கும் போது வீட்டு வரி, குடிநீா் வரி உள்பட அனைத்தும் உயா்ந்துவிடும். அதனால் திருவள்ளூா் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூா் ஊராட்சியை இணைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்

அப்போது, ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாய்வு செய்யாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என ஆட்சியா் கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com