அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்களின் பணி சுமையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருவள்ளூா் மாவட்ட பொருளாளா் வெண்ணிலா தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், 21 மாத நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டா் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்களின் பணி சுமைகளை குறைக்க வேண்டும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியா்களைக் கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

