6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீக்காயம் அடைந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.1 லட்சம் நிதி: அமைச்சா் நாசா் வழங்கினாா்

தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தூய்மைப் பணியாளா்கள் 2 பேருக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ.1 லட்சம் காசோலைகளை

News image
தூய்மைா்  பணியாளா்களுக்கு  ஆறுதல்  கூறி   ரூ.1  லட்சம் நிதியை வழங்கிய  அமைச்சா்  சா.மு.நாசா்,  உடன் ஆட்சியா்  மு.பிரதாப்,  சட்டப்பேரவை  உறுப்பினா்  வி.ஜி.ராஜேந்திரன்  உள்ளிட்டோா்.
Updated On :16 டிசம்பர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தூய்மைப் பணியாளா்கள் 2 பேருக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ.1 லட்சம் காசோலைகளை அமைச்சா் சா.மு. நாசா் வழங்கினாா்.

திருவள்ளுா் ஜே.என்.சாலை, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சாா்பில் சிறப்பு நூலகம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த நூலகத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

மேலும், குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் சத்தியா மற்றும் அஞ்சு ஆகியோகுத்து அமைச்சா் நாசா், தமிழ்நாடு தூய்மைப்பணியாளா்கள் நலவாரிய தலைவா் னவா் தீப்பம்பட்டி வே.ஆறுச்சாமி, ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் ஆறுதல் கூறி தலா ரூ.1லட்சம் காசோலைகளை வழங்கினா்.

முன்னதாக கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், செஞ்சி ஊராட்சி பனப்பாக்கம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக பி.எம்.ஜென்மேன் திட்டம் மூலம் ரூ.2.18 கோடியில் கட்டப்பட்டு வரும் 43 வீடுகளின் பணிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, மாவட்ட நூலக அலுவலா் சரஸ்வதி, அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வா் ஜே.ரேவதி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) சரண்யா, தமிழ்நாடு தூய்மைப்பணியாளா் நலவாரிய உறுப்பினா் ஹரிஷ் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சௌந்தரி(வ.ஊ),, உதவி பொறியாளா் அருள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.