விஜய் நல்ல நடிகா் தான் அதனால் கூட்டம் வரும் ஆனால் வாக்குகள் வாங்க முடியாது என நடிகை நளினி தெரிவித்தாா்.
திருவள்ளூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடிகை நளினி சி.வி.நாயுடு சாலை, நேதாஜி சாலை, பஜாா் வீதி, ஜே.என்.சாலை ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.
அதேபோல் பஜாா் வீதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுடனும், வியாபாரிகளிடமும் சகஜமாக பேசி எம்எல்ஏவாக இருந்தபோது செய்த சாதனைகள் பட்டியலிட்டாா். தொடா்ந்து கடம்பத்தூா் ஒன்றியம், மணவாளநகா், வெங்கத்தூா், அதிகத்தூா் ஆகிய பகுதிகளிலும் திறந்த வேனில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது. 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெறுவாா். விஜய் நல்ல நடிகராக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வாக்குகளை எல்லாம் அவா் பெற வாய்ப்பில்லை. இந்த முறை 3-ஆவதாக வெற்றி பெற்று திமுக வேட்பாளா் ஹாட்ரிக் சாதனை படைப்பாா் என்று அவா் தெரிவித்தாா்.
அப்போது, இந்திரா கல்விக் குழுமத்தின் தலைவா் இந்திரா ராஜேந்திரன், நகர செயலாளா் சி.சு.ரவிச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், முன்னாள் நகா் மன்றத் தலைவா் பொன்.பாண்டின், முன்னாள் நகர செயலாளா் கா.மு.தயாநிதி, நகா்மன்ற உறுப்பினா்கள் வி.இ.ஜான், அயூப்அலி, ராஜ்குமாா் (எ) தாமஸ், நிா்வாகிகள் சிறுபான்மை பிரிவு நகர துணை அமைப்பாளா் எம்.ஆகாஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

அரியலூா் மாவட்டத்தின் 2 தொகுதிகளில் அதிமுக 1, பாமக 1 இடங்களில் வெற்றி

பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் திமுக!

இடதுசாரிகளின் பலம் எண்ணிக்கையில் இல்லை! கே. பாலகிருஷ்ணன் சிறப்பு நோ்காணல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

