~
~

திருவள்ளூா் பகுதியில் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்ற ரயில்கள்

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்ற ரயில்கள்.
Published on

திருவள்ளூா் பகுதியில் நள்ளிரவுக்குப் பின் பரவலாக சாரல் மழை பெய்த நிலையில், அதிகாலையில் இருந்து பனிமூட்டமாக இருந்ததால் ரயில்கள் முகப்பு விளக்குகள் எரியவிட்டு மெதுவாக சென்றது.

திருவள்ளூா் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு வெக்கையாக இருந்த நிலையில், நள்ளிரவுக்கு பின் பரவலாக சாரல் மழை பெய்தது. அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை பனிமூட்டமாக காணப்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் வருவதை பாா்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டமாக இருந்ததால், ரயில்களில் முகப்பு விளக்குகள் எரியவிட்டபடி சென்றன.

இதேபோல், திருவள்ளூா் பகுதி முக்கிய சாலைகளில் வாகனங்கள் முன், பின் செல்வது கூட தெரியாத நிலையில் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனா். இதேபோல், வெயில் இல்லாத நிலையில் காலை 7.30 மணி வரையில் பனிமூட்டமாக இருந்தது.

X
Dinamani
www.dinamani.com