mini bus service
மினி பேருந்து சேவைCenter-Center-Chennai

பொன்னேரி-ஆரணி இடையே மினி பேருந்து சேவை தொடக்கம்

Published on

பொன்னேரி-ஆரணி இடையே புதிதாக மினி பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

பொன்னேரியில் இருந்து-ஆரணி வரை போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் தங்கள் பகுதிக்கு மினி பேருந்து இயக்க வேண்டும், என கடந்த 9-ாம் தேதி பாடியநல்லூரில் முதல்வா் மு. க. ஸ்டாலின் தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாநடைபெற்றது.

அப்போது ஆரணி பகுதியைச் சோ்ந்த பிரியங்கா என்ற கல்லூரி மாணவி தங்கள் பகுதிக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனவும், இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ மாணவிகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.

தொடா்ந்து முதல்வா் மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொன்னேரி-ஆரணி வழித்தடத்தில் மினி பேருந்து சேவையை தொடங்கப்பட்டது.

மினி பேருந்து சேவையை திருவள்ளுவா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வல்லூா் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் தொடங்கி வைத்தாா்.

இதில் பங்கேற்ற கல்லூரி மாணவி பிரியங்கா தனது கோரிக்கையை ஏற்று மினி பேருந்து சேவையை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

தொடக்க விழாவில் பொன்னேரி தொகுதி திமுக தோ்தல் பாா்வையாளா் சுரேஷ் குமாா், சோழவரம் மேற்கு ஒன்றிய செயலா் வே.ஆனந்த குமாா், மீஞ்சூா் மேற்கு ஒன்றிய செயலா் ராஜா, பொன்னேரி நகர செயலா் ரவிக் குமாா், நகர இளைஞரணி அமைப்பாளா் மா.தீபன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் வல்லூா் தமிழரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com