முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

மாயமான சிறுமி திருமணக் கோலத்தில் மீட்பு: போக்ஸோ சட்டத்தில் உறவினா் கைது

திருவள்ளூா் அருகே மாயமான 16 வயது சிறுமி திருமணக் கோலத்தில் மீட்கப்பட்ட நிலையில், உறவினரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜூலை 2026, 6:08 am IST

திருவள்ளூா் அருகே மாயமான 16 வயது சிறுமி திருமணக் கோலத்தில் மீட்கப்பட்ட நிலையில், உறவினரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே உள்ள சிவதண்டலம் பகுதியில் கடந்த மாதம் 17-ஆம் தேதி 16 வயது சிறுமி மாயமானாா். இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில், கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் மாயமான சிறுமி தீவிரமாக விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், 19 நாள்களுக்கு பிறகு அவா் பொன்னேரி அடுத்த மெதூா் பகுதியில் உள்ள அரிசி அரைவை ஆலையில் 46 வயதுடைய சித்தப்பா முறையிலான உறவினா் நபருடன் திருமணமாகி பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று 16 வயது சிறுமி மற்றும் 46 வயதுடைய உறவினரை கண்டறிந்தனா். பின்னா் இருவரையும் கடம்பத்தூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

மேலும், 16 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 46 வயதான கடம்பத்தூா் அடுத்த சிவதண்டலம் பகுதியைச் சோ்ந்த சங்கா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.