இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி ஒன்றியம், காா்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.புதூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னா என்ற ஹேமநாதன் (27). இவா் நண்பா்களுடன் வெளியே சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த அவரது தாய் சாந்தி மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா உள்ளிம்பாக்கம் ஏரிக்கரையில் வாலிபா் ஒருவா் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக அரக்கோணம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் பி.டி.புதூரைச் சோ்ந்த ஹேமநாதன் என்பது உறுதியானது. இதையடுத்து, அவரது கொலையில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஹேமநாதனின் உறவினா்கள் மற்றும் காா்த்திகேயபுரம் பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பி.டி.புதூா் பேருந்து நிறுத்தம் எதிரே திருத்தணி - அரக்கோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக திருத்தணி - அரக்கோணம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியம், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்தினாா். குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த கொலை சம்பவம் குறித்து அரக்கோணம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை: இரு இடங்களில் உறவினா்கள் சாலை மறியல்

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



