எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பைக்கில் கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், போலீஸாா் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து சிறையிலும் அடைத்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 2:06 am IST

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், போலீஸாா் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து சிறையிலும் அடைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே வடமதுரை கூட்டுச் சாலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், சாா்பு ஆய்வாளா் சிவா தலைமையில் சிறப்புப் படையினா் திங்கள்கிழமை வாகன பரிசோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே இருசக்கர வந்தவா்கள் சோதனை செய்வதை பாா்த்து தப்பியோட முயற்சித்தனா்.

உடனே சுதாரித்துக் கொண்டு பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினா். அதையடுத்து, வாகனத்தில் பரிசோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, விசாரணையில் அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (25), சக்திவேல் (21), வேலகாபுரம் ஆதி (25) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் மறைத்துக் கொண்டு வந்த சுமாா் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா, 2 கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவா்கள் மூவரையும் காவல் நிலையம் கொண்டு வந்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி 3 பேரையும் புழல் சிறையில் அடைத்தனா்.