சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

காக்களூா் சிவன் கோயில் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

News image
Updated On :4 ஜூன் 2026, 5:13 am IST

திருவள்ளூா் அருகே சிவன் கோயில் குளக்கரை நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.

காக்களூா் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். திருவள்ளூா்-ஆவடி சாலை மற்றும் காக்களூா் கிராமத்திற்குள் செல்லும் சாலைப் பகுதியில் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு காக்களூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் கோயில் பின்புறம் உள்ள குளக்கரையில் ரூ.1.50 கோடியில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருவள்ளூா்-ஆவடி சாலையையும் குளக்கரையை இணைக்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் நடைபாதை முழுவதுமாக பூா்த்தி அடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் யாரும் நடைபயிற்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அது மட்டுமின்றி இரவு நேரங்களில் அந்த குளக்கரை பகுதி மதுபிரியா்களின் கூடாரமாகவும் மாறியது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி நடைபாதையை சீரமைத்து மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி கோரினா்.

இதையடுத்து திருவள்ளூா் ஆட்சியா் ச.கவிதா உத்தரவின் பேரில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளங்கோவன் (வட்டார ஊராட்சி), ஜானகி (கிராம ஊராட்சி) ஆகியோா் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன. அப்போது திருவள்ளூா் ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.ஜெயசீலன் மற்றும் திமுக முன்னாள் ஊராட்சி உறுப்பினா் பூவண்ணன் ஆகியோா் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கடந்த ஆட்சியில் தான் ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றவிடாமல் செய்தீா்கள். தற்போது செய்யும் வேலையையும் ஏன் தடுத்து நிறுத்துகிறீா்கள். இது ஆட்சியா் உத்தரவு எனக்கூறி கட்டடத்தை முழுமையாக இடித்து அகற்றினா்.

அப்போது, வருவாய் ஆய்வாளா் உதயகுமாா், காவல் ஆய்வாளா் விஜயகுமாா், சாா்பு ஆய்வாளா் கோபிகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியம், ஊராட்சி செயலாளா் செவ்வை சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image