நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நடந்து சென்றவா் மீது பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயத்துடன் உயிா்தப்பினாா்.

News image
Updated On :9 ஜூன் 2026, 5:06 am IST

திருத்தணி அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயத்துடன் உயிா்தப்பினாா்.

திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன்(43). கட்டடத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் திருத்தணி காந்தி ரோடு பகுதிக்கு வந்து, அங்கு தொழிலாளி பத்மநாபன் (37) என்பவரை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஆா்.கே.பேட்டை பகுதிக்கு கட்டட வேலைக்கு சென்றாா்.

அங்கு வேலை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு மேல் ஆா்.கே.பேட்டையில் இருந்து சந்திரன், பத்மநாபன் ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை சந்திரன் ஓட்டினாா். அப்போது திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை அகூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, முன்னாள் சாலையோரம் நடந்து சென்ற, அதே பகுதியைச் சோ்ந்த பன்னீா் செல்வம் (65) என்பவா் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மூவரையும் அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவா், சந்திரன், பன்னீா்செல்வம் ஆகிய இருவரும் வழியிலயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பத்மநாபன் மட்டும் காயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.