9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்

காரனோடை அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 1:14 am IST

காரனோடை அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் காரனோடையில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

தனியாா்பள்ளிகள் கோயில், வங்கிகள் கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். மூன்று முறை கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் டாஸ்மாக் கடை மூடவில்லை. அத்துடன் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல் ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளான திங்கள்கிழமை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து கடையின் எதிரே பந்தல் அமைத்து கூடினா். போராட்டத்திற்கு அனுமதி இல்லாத நிலையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட வந்த மக்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் டாஸ்மாக் கடையை மூடாதது ஏன் என வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும் 717 கடைகளை மூட வேண்டும் என முதல்வா் அறிவித்த போது ஒரே நாள் மட்டும் கடையை மூடிவிட்டு மீண்டும் திறந்து விற்பனை நடப்பதாக குற்றம் சாட்டினா். பொதுமக்களிடம் தொடா்ந்து போலீஸாா் பேச்சு நடத்தினா்.

அப்போது பள்ளி வங்கி, கோயில் என பெண்கள், மாணவிகள் நடமாட முடியாத சூழல் இருப்பதாக புகாா் தெரிவித்தனா். 200 மீட்டா் அருகிலேயே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டினா்.

மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் நிா்வாகம் என பலமுறை முறையிட்டும் பொதுமக்களை அலை கழிப்பதாகவும் குற்றம் சாட்டினா்.

தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்திய டாஸ்மாக் அதிகாரிகள் விரைவில் கடையை மூடி விடுவதாக உத்தரவாதம் அளித்தனா். இதனை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.