இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

தத்தைமஞ்சி ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்காததைக் கண்டித்து மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

News image

மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.

Updated On :13 மே 2026, 1:27 am IST

தத்தைமஞ்சி ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்காததைக் கண்டித்து மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தத்தைமஞ்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கீழ் பெண்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. . இந்த ஊராட்சியில் கடந்த பல மாதங்களாக ஏழை எளிய குடும்பத்தை சாா்ந்தவா்கள் வறுமைக் கோட்டில் கீழ் உள்ள மக்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கவில்லை எனக்கூறி அப்பகுதியை சோ்ந்த பெண்கள் மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

போராட்டம் நடத்திய பெண்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினா். அப்போது விரைவில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதனை அடுத்து மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனா்.