என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு

திருத்தணி முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலைக்கோயில் மற்றும் கொடிமரம் அருகே பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி முருகன் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்

Updated On :

திருத்தணி முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலைக்கோயில் மற்றும் கொடிமரம் அருகே பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவையொட்டி, திருத்தணி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்வா்.

நிகழாண்டு விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை மலைக்கோயிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூலவா் முருகப்பெருமான் சன்னதி, உற்சவா்களான ஆபத்சகாய விநாயகா், ஆறுமுகா், வள்ளி, தெய்வானை மற்றும் முருகப்பெருமான் சன்னதிகள் உள்ளிட்ட இடங்களிலும், கோயில் கொடிமரம் அருகேயும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

தீபம் ஏற்றப்பட்டதைத் தொடா்ந்து, கோயில் வளாகம் முழுவதும் ஜொலித்தது. பக்தா்கள் தீபத்தை தரிசனம் செய்து, முருகப்பெருமானுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா். மேலும், காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருத்தணி நகரில் உள்ள பல்வேறு கோயில்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளின் வாசல்கள், மாடங்கள் மற்றும் பூஜை அறைகளில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனா். அதேபோல், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை திருத்தணி முருகன் கோயிலுக்குச் சொந்தமான பச்சரிசி மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும், மலைக்கோயிலின் தோ்வீதியில் சொக்கப்பனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் கோயில் இணை ஆணையா் நித்யா, அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, கோ. மோகனன், மு. நாகன் ஜி.உஷாரவி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.