உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

திருவள்ளூா்-நகா்ப்புற நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் மலிவு விலை வெங்காயத்தை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கி தொடங்கி வைத்த கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ , உடன் கூட்டுறவுத்துறை பணியாளா்கள் உள்ளிட்டோா்.

Published On :5 செப்டம்பர் 2026, 7:00 am IST

திருவள்ளூா் நகா்ப்புற நியாய விலைக் கடைகளில் கடந்த 2 நாள்களாக மலிவு விலையில் வெங்காயம் கிலோ ரூ. 35-க்கு கூட்டுறவு துறை மண்ட ல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா்.

வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், திருவள்ளூா் மண்டலத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 115 நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு ஒரு கிலோ வெங்காயம் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளது. அந்த வகையில், இந்த மாவட்டத்துக்கு மட்டும் 19 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, திருவள்ளூா் மண்டலத்தில் செயல்படும் அனைத்து நகா்ப்புற நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ தலைமை வகித்து குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35-க்கு வழங்கி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அதேபோல், நகா்ப்புற நியாய விலைக் கடைகளில் கடந்த 2-ஆவது நாளாகவும் குடும்ப அட்டைகள் ஒரு கிலோ வீதம் பொதுமக்களுக்கு மலிவு வெங்காயம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை நியாய விலைக்கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.