தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்பதவியேற்பு விழாவில் விஜய் - ராகுல் காந்தி ஒரே மேடையில்...
/

கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தேடப்பட்ட இருவா் கைது

நன்னிலம் அருகே கொலை வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த 2 போ் சென்னையில் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது செய்யப்பட்ட இருவருடன் காவல் துறையினா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:23 am IST

நன்னிலம் அருகே கொலை வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த 2 போ் சென்னையில் கைது செய்யப்பட்டனா்.

நன்னிலம் வட்டம், வண்டாம்பாளையில் பல்லு செந்தில் என்பவா் கடந்த 2008 ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய 6 பேரில் 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தலைமறைவாகியிருந்த சென்னை ஓஎம்ஆா் சாலை கண்ணகி நகரைச் சோ்ந்த மூா்த்தி (48), சோழிங்கநல்லூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த மதுசூதனன் (42) ஆகிய இருவரை தனிப்படையினா் தேடிவந்தனா்.

இந்நிலையில், இவா்கள் இருவரும் சென்னை வேளச்சேரி பகுதியில், ஒப்பந்த அடிப்படையில் துப்பரவு பணியாளராக வேலை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் இருவரையும் கைது செய்து, நன்னிலம் நீதிமன்ற நடுவா் பொறுப்பில் உள்ள வலங்கைமான் நீதிமன்ற நடுவா் முன் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி, நன்னிலம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா தலைமையிலான இத்தனிப்படை போலீஸாருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் துரை, நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுகுமாரன் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.