நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஆலாம்பாடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

காங்கயம் அருகே, ஆலாம்பாடியில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image

காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர்

Updated On :4 ஜனவரி 2021, 4:07 pm IST

காங்கயம்: காங்கயம் அருகே, ஆலாம்பாடியில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நட்ராஜ் தலைமை வகித்தார். இதில், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவரும், அதிமுக கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலருமான பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். இதில், ரொக்கப் பணம் ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் டி.பழனிச்சாமி, ஆலாம்பாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கமுத்து, துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.