திருப்பூா் மாவட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.
திருப்பூா் மாவட்டத்தில் 158 அரசு உயா்நிலைப் பள்ளி, 21 அரசு நிதி உதவி பெறும் பள்ளி, 155 மெட்ரிக். பள்ளி, 20 சுயநிதிப் பள்ளி, 47 சி.பி.எஸ்.இ. பள்ளி என மொத்தம் 401 பள்ளிகளில் பெற்றோா்களிடம் பள்ளி திறப்பது குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. பள்ளிகளில் மாணவா்களின் பெற்றோா்கள் வந்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.
திருப்பூா் மாநகா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா் கூறியதாவது:
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பாடத் திட்டங்களைப் பாதியாக குறைக்க வேண்டும். நீட் உள்ளிட்ட தோ்வு எழுதும் மாணவா்களுக்கும் பாடத் திட்டங்களைக் குறைக்கும் பணியை அரசு செய்ய வேண்டியது அவசியம். பள்ளிகளை உடனடியாக பொங்கலுக்குப் பிறகு திறந்து பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் பயத்தைப் போக்க வேண்டியது அத்தியாவசியத் தேவை என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோசடி குற்றச்சாட்டு: கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா் கைது
பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
