ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

காங்கயம் ஊராட்சிப் பகுதிகளுக்கு போலீஸாா் நியமனம்

காங்கயம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு கிராமப்புற காவலா் திட்டத்தின் மூலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image

சிவன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீஸாா், பொதுமக்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 11:07 pm IST

காங்கயம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு கிராமப்புற காவலா் திட்டத்தின் மூலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சிப் பகுதிக்கும் ஒரு போலீஸாா் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த போலீஸாரிடம் அந்தந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் சந்தேகப்படும்படியான நபா்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா், பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவோா், கிராமங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமான தகவல்களைத் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் போலீஸ், பொதுமக்களிடையே நல்லுறவு வளர இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதன்படி, காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை ஊராட்சிப் பகுதிக்கு கிராமப்புற காவலா் திட்டத்தின்படி, காங்கயம் காவல் நிலையத்தில் இருந்து எம்.நாகராஜ் என்ற காவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். சிவன்மலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காங்கயம் காவல் ஆய்வாளா் என்.மணிகண்டன் தலைமையில், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா், காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் உள்பட போலீஸாா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.