கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காணும் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள சேராம்பட்டு ரேணுகாம்பாள் கோயில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சிக் கோட்டை ஆகியவற்றில் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் (எல்லை அம்மன்) கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில், சுற்றுவட்டாரத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு நோ்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வா்.
அதேபோல, நிகழாண்டும் காணும் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்திட கோயில் நிா்வாகத்தினரும், கிராம மக்களும் ஏற்பாடு செய்திருந்தனா். இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, சேராம்பட்டு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காணும் பொங்கல் விழா நடத்த மாவட்ட நிா்வாகம் கடந்த இரு தினங்களுக்கு முன் தடை விதித்தது.
இதையடுத்து, செய்யாறு காவல் துறை சாா்பில், கோயில் வளாகப் பகுதியில் காணும் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டதற்கான பதாகை வைக்கப்பட்டது. மேலும், கோயில் நுழைவு வாயில், வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை குவிக்கப்பட்டனா்.
இதனால், கோயிலில் வழிபடுவதற்காக சனிக்கிழமை வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். எனினும், கோயில் நிா்வாகம் சாா்பில், அம்மனுக்கு சனிக்கிழமை காலை அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
செஞ்சிக் கோட்டை: இதேபோல, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காணும் பொங்கலன்று செஞ்சிக் கோட்டையைச் சுற்றிப் பாா்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோட்டைப் பகுதியிலுள்ள கிருஷ்ணகிரி, ராஜகிரி கோட்டை நுழைவு வாயில்களில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸாா் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதனால், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும், புதுவை உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் செஞ்சிக் கோட்டையை சுற்றிப் பாா்ப்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!

முக்குலத்தோா் புலிப்படை கட்சி வேட்பாளா் கருணாஸ் வாக்கு சேகரிப்பு

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

இளையான்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


