பொன்னிற்கு பொற்காலமாகிய "2011'
பாமரன் கூட விரும்பும் தங்கத்தின் விலை இந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 11-வது ஆண்டாக தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு கூடுதல் ஆதாயம் தந்துள்ளது. பங்குச் சந்தைக்கு போதாத காலமாகிய 2011, தங்கத்


பாமரன் கூட விரும்பும் தங்கத்தின் விலை இந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 11-வது ஆண்டாக தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு கூடுதல் ஆதாயம் தந்துள்ளது. பங்குச் சந்தைக்கு போதாத காலமாகிய 2011, தங்கத்துக்கு பொற்காலமானது.
பொருளாதார தேக்கநிலை, பங்குச் சந்தை வீழ்ச்சி, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் நாடியதும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
24 காரட் தங்கம் 10 கிராம் விலை டிசம்பர் 8-ம் தேதி அதிகபட்சமாக ரூ. 29,280 வரை உயர்ந்தது.
ஆனால், மே மாதம் தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்திருந்தது. உலக அளவில் தங்கம் விற்பனை அதிகரித்ததே இதற்குக் காரணம். கமாடிட்டி மார்க்கெட்டில் தங்கம் வாங்குவதற்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை அதிகரிக்கப்பட்டதால் முதலீட்டாளர்கள் தங்கள் கைவசம் வைத்திருந்த தங்கத்தை மொத்தமாக விற்பனை செய்தனர். இந் நிலையில், பொருளாதார தேக்க நிலை காரணமாக தங்கத்தின் மீது மீண்டும் மோகம் அதிகரித்தது.
பங்குச் சந்தை உள்ளிட்ட மற்ற முதலீட்டுத் திட்டங்களில் அச்சம் கொண்டிருந்த முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுக்கு தங்கத்தை நாடினர். மேலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் சில நிதி நெருக்கடிக்கு ஆளானதால் பங்குச் சந்தை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதுவும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேட வைத்துள்ளதாக மார்க்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டிசம்பர் 29-ம் தேதி வியாழக்கிழமை நிலவரப்படி 10 கிராம் தங்கம் (24 காரட்) ரூ.27,645-ல் விற்கப்பட்டது. இது கடந்த ஆண்டு இறுதியில் ரூ. 20,680-ஆக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுமார் 34 சதவீதம் உயர்ந்துள்ளது.
1921-ல் ஒரு பவுன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.21- ஆக இருந்தது. 2000-ல் ரூ. 3,300-ஐ கடந்தது. 2008-ல் ரூ.11,000-க்கும் மேல் சென்றது. இப்போது ரூ.20,680-ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளி (.999) ரூ.52,300-ல் உள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.47,030 ஆக இருந்தது. மொத்தம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி கடந்த ஏப்ரல் 25-ல் ரூ.75,020 வரை உயர்ந்தது. கடந்த 31 ஆண்டுகளில் இந்த அளவுக்கு வெள்ளி விலை உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.
தங்கம் கடந்து வந்த பாதை
(24 காரட் 10 கிராம் விலை)
1981 மார்ச் ரூ.1,700
1990 மார்ச் ரூ.3,200
2000 மார்ச் ரூ.4,380
2005 மார்ச் ரூ.6,180
2007 அக்டோபர் ரூ.9,710
2008 ஜூலை ரூ.13,029
2010 ஏப்ரல் ரூ.16,692
2010 நவம்பர் ரூ.20,439
2011 மார்ச் ரூ.20,970
2011 ஜூலை ரூ.22,170
2011 டிசம்பர் ரூ.27,645
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...