தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எப்போதும் முதலிடம்! டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

News image
Updated On :27 பிப்ரவரி 2017, 12:12 pm

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். மெக்சிகோ, ஜெர்மனி, பிரான்ஸ் என்று தொடங்கி இந்தியாவரை அவரது செயல்பாடுகளும் அறிவிப்புகளும் கருத்துகளும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மேற்கத்திய நாடுகளில் அவரது அரசியல் கருத்துகள் பெரும் எதிர்வினைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றால், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளைப் பொருத்தவரை அது பொருளாதாரத் தாக்கமாக இருக்கிறது. உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவைகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று கூறலாம். அதில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைச் செய்வது அமெரிக்கா.
டிரம்ப் அதிபரானதும் வெளியிட்ட அறிக்கைகளின் முக்கிய சாராம்சம் வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்துவது என்பதாகும். அமெரிக்கர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை அயல்நாட்டவர் தட்டிச் செல்கின்றனர் என்பது அவருடைய குற்றச்சாட்டு. அவரைப் பொருத்தவரையில், அது அந்த நாட்டின் அரசியல், பொருளாதாரம்! ஆனால் பாதிப்பு என்று வந்தால் அது பிறருக்குத்தானே!
டிரம்ப் அறிவிப்புகள் வருவதற்கு முன்பே, அவரது தேர்தல் பிரசாரத்தின்போதே இதுபோன்ற சூழல் எழக் கூடும் என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் ஊகித்திருக்க வாய்ப்புள்ளது. காரணம், அமெரிக்க அரசியல் சூழலில் ஜனநாயக கட்சியினர் எப்போதுமே வெளிநாட்டவர் வேலைவாய்ப்புகளைக் கேள்விக்கு உள்ளாக்குபவர்கள். தற்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப்பும் அதனைப் பெரிய ஆயுதமாக எடுத்துள்ளார்.
இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் மிகுந்த நம்பிக்கையோடு புதிய சூழலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார். அவர் அந்தப் பொறுப்புக்கு வந்தவுடன் ஏற்பட்டிருக்கும் முதல் சோதனை என்று இதனைக் கூறலாம்.
அண்மைக்காலம் வரை டி.சி.எஸ். தலைமை நிர்வாகியாக இருந்த என்.சந்திரசேகரன், டாடா சன்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதையடுத்து, டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த ராஜேஷ் கோபிநாதன், தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு வந்தார். ராஜேஷ் கோபிநாதன் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்குதான் புதியவரே தவிர, சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாயுள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துக்குப் புதியவரல்ல.
"உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை சவால்களை சந்தித்து வருகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில், நமது நாட்டிலேயே கூட ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன' என்று கூறுகிறார் அவர்.
டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் வெறும் 6% மட்டுமே இந்தியாவின் பங்களிப்பு. முன்னணி ஐ.டி. நிறுவனங்களான இன்போசிஸ் வெறும் 3.4% இந்தியாவிலிருந்து பெறுகிறது. இதில் விப்ரோ மட்டும் 10சதவீதத்துடன் முன்னே உள்ளது.
"இந்தியாவிலிருந்து கிடைக்கும் வருவாய் சிறிய பங்களிப்பாக இருந்தாலும், தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பப் பணிகள் யாவும் எங்கள் நிறுவனத்தினுடையதுதான்; இந்திய ஐ.டி. துறையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்றுமே முதலிடத்தில் இருந்து வருகிறது' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ராஜேஷ் கோபிநாதன்.
பொருளாதார ரீதியாக அமெரிக்கா பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற நிறுவனத்தின் வருங்காலத் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு ராஜேஷ் கோபிநாதன் கூறும் பதில்:
இந்தியாவின் மொத்த ஐ.டி. துறை வருவாயில் 60% அமெரிக்காவிலிருந்து வருகிறது என்பது உண்மைதான். ஐரோப்பாவும் பிரிட்டனும் 20% பங்களிப்பைக் கொண்டுள்ளன.
இந்தத் துறையில் தொழில்நுட்பம் என்பது எப்போது மாறிக் கொண்டே இருக்கிறது. எனவே அதன் கூடவே நிறுவனமும் புதிய செயல்பாடுகளில் ஈடுபடும்; அதன் மூலம் வளர்ச்சி பெறும். டிசிஎஸ் போன்ற நிறுவனத்தின் பலத்தின் அடிப்படையில் பேசும்போது, அடுத்த 5 ஆண்டுகளில் எங்கள் நிறுவனம் மேலும் பலம் பொருந்திய நிலையில் இருக்கும். மேலும் பலதரப்பட்ட துறைகளில் எங்கள் ஐடி சேவை விரிவடைய வாய்ப்பு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக டிசிஎஸ் நிறுவனத்தில் நாங்கள் செய்து வந்த சில பரிசோதனைகளின் அடிப்படையில், எந்தப் புதிய பணியையும் எந்த அளவிலாக இருந்தாலும் விரைந்து முடிக்க முடியும். தொழில்நுட்பத்தை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்து அது வாய்ப்பாகவும் இருக்கும்; சவாலாகவும் இருக்கும் என்கிறார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.