கோட்டக் மஹிந்திரா வங்கி லாபம் 27% அதிகரிப்பு
தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27% அதிகரித்தது.


தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27% அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.9,953.57 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.10,874.12 கோடியானது. நிகர லாபம் ரூ.1,404.34 கோடியிலிருந்து 27% உயர்ந்து ரூ.1.789.24 கோடியானது.
சென்ற முழு நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.33,905.44 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.38,723.67 கோடியாகவும், நிகர லாபம் 26% வளர்ச்சி கண்டு ரூ.6,201 கோடியாகவும் உயர்ந்துள்ளன.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 2.25%-லிருந்து குறைந்து 1.95%-ஆகியுள்ளது. சென்ற நிதி ஆண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.0.70 காசுகள் ஈவுத்தொகை வழங்க இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது என கோட்டக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...