பணவீக்கம் 5.07%-ஆக குறைந்தது

நாட்டின் நுகர்வோர் பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதம் 5.07 சதவீதமாகக் குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள், சில வகை உதிரி பாகங்களின் விலைகள் குறைந்ததையடுத்து, நுகர்வோரர் விலைக் குறியீட்டு எண்ணை
பணவீக்கம் 5.07%-ஆக குறைந்தது
Updated on
1 min read

நாட்டின் நுகர்வோர் பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதம் 5.07 சதவீதமாகக் குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள், சில வகை உதிரி பாகங்களின் விலைகள் குறைந்ததையடுத்து, நுகர்வோரர் விலைக் குறியீட்டு எண்ணை (சிபிஐ) அடிப்படையாகக் கொண்டு பணவீக்க விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாத பணவீக்க விகிதம் 5.21 சதவீதமாக இருந்தது. அது, முந்தைய 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிக பணவீக்க விகிதமாகும். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அது 5.07-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஜனவரி மாத பண வீக்க விகிதம் 2.04 சதவீதம் அதிகமாகும். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாத பணவீக்க விகிதம் 3.17-ஆக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com