ஹெச்டிஎஃப்சி அஸட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பங்கு வெளியீட்டுக்கு அனுமதி அளிக்க கோரி இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத்திடம் (செபி) விண்ணப்பிக்கப்பட்டது. அனைத்து சாதகமான அம்சங்களையும் ஆராய்ந்து அறிந்து தற்போது செபி, பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பொதுப் பங்கு வெளியீட்டில் கோரிக்கை அடிப்படையிலான விற்பனைக்கு மொத்தம் 2.54 கோடி பங்குகள் வரவுள்ளன. இதில், 85.92 லட்சம் பங்குகள் ஹெச்டிஎஃப்சிக்கும், 1.68 கோடி வரையிலான பங்குகள் ஸ்டாண்டர்ட் லைஃப்-க்கும் சொந்தமானவை. ஹெச்டிஎஃப்சி ஏஎம்சி பணியாளர்களுக்காக 3.20 லட்சம் வரையிலான பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர, ஹெச்டிஎஃப்சி பங்குதாரர்களுக்கும் 24 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஹெச்டிஎஃப்சி) மற்றும் ஸ்டாண்டர்ட் லைஃப் இன்வெஸ்ட்மெண்ட் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் ஹெச்டிஎஃப்சி ஏம்சி ஆகும். இது, கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி ரூ.3 லட்சம் கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








