மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முதல்முறையாக அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய புதிய கார்மின் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

பிரபல 'கார்மின் இந்தியா' வாட்ச் நிறுவனம், அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

News image
Updated On :8 டிசம்பர் 2019, 10:19 am

DIN

பிரபல 'கார்மின் இந்தியா' வாட்ச் நிறுவனம், அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியாவிலேயே முதல்முறையாக  அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் 'வெனு' ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்ச்சியான ஐ.எப்.ஏ 2019ல் வெளியிடப்பட்டது. 

வெனு & விவோஆக்டிவ் 4 ஸ்மார்ட் வாட்சுகள், கார்மின் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் குழுவின் சமீபத்திய உருவாக்கம் ஆகும். சுவாசம், தூக்கம், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, இதயத்துடிப்பு உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் வசதி இதில் உள்ளது. பொதுவாக உடல்நலம் மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்கள் இதில் இருப்பதால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது. 

Story image

'கார்மினின் முதல் அமோல்டு டிஸ்ப்ளே ஸ்மார்ட் வாட்ச் 'வெனு'வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கடிகாரம் எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் வண்ணங்களைச் சேர்க்கும். மேலும், உடற்பயிச்சிகளைக் கூட இது வேடிக்கையானதாக மாற்றும்' என்று கார்மின் நிறுவன பிரதிநிதி தெரிவித்துள்ளார். 

வெனு மற்றும் விவோஆக்டிவ் 4 ஆகிய இரண்டுமே நவீன ஸ்மார்ட்வாட்சுகள் ஆகும். சுவாசம், தூக்கம், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் நீர் அளவு, மன அழுத்த அளவு உள்ளிட்டவை மிகச்சரியான அளவில் கணிக்கப்படுகிறது. 

இதுதவிர, சாதாரண வாட்சுகள் போல இதனை தினமும் அணியக்கூடியது. அதன் பேண்டுகளை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். சூரிய ஒளியிலும்  நன்கு தெரியக்கூடிய 'கார்மின் குரோமா டிஸ்ப்ளே' தொழில்நுட்பம் திரைக்கு வலுசேர்க்கிறது. 

அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய வெனு ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.37,490. விவோஆக்டிவ் 4 ஜி.பி.எஸ் ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.32,590 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்சுகள் டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.