மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீடுகளுக்குள் மக்கள் முடக்கம் எதிரொலி: உலகெங்கிலும் எரிபொருள் நுகர்வில் கடும் சரிவு!

கரோனா தொற்று பரவல் காரணமாக உலகெங்கிலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.  

News image
Updated On :14 ஏப்ரல் 2020, 1:35 pm

எம். சடகோபன்


கரோனா தொற்று பரவல் காரணமாக உலகெங்கிலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.  தேவையற்ற பயணங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனால், உலகெங்கிலும் எரிபொருள் தேவை  பெருமளவு குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகெங்கிலும் கரோனா தாக்கத்தால் எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் உற்பத்தி நாடுகள் அனைத்தும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர் கொண்டுள்ளன.  அமெரிக்க எரிசக்தித் தகவல் நிர்வாகம் வெளியிட்டுள்ள தரவுகள் இதை தெளிவாக விளக்குகின்றன. 

இதற்கிடையே, இந்த மாதம்  கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 27 மில்லியன் பீப்பாய்கள் குறையக்கூடும் என்று எண்ணெய் மதிப்பீட்டு நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மற்றொரு மதிப்பீட்டு நிறுவனத்தின் தகவல், கச்சா எண்ணெய் நுகர்வு  நாளொன்றுக்கு 35 மில்லியன் பீப்பாய்கள் குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. 

இந்தப் பின்னணியில் , பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (ஓபெக்) மற்றும் அதன் கூட்டாளிகள் காணொளிக் காட்சி மூலம் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளன. அந்தக் கூட்டத்தில் நாளொன்றுக்கு பெட்ரோல் உற்பத்தியை 10 மில்லியன் பீப்பாய்கள் அளவுக்கு குறைத்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டன.

அமெரிக்கா 
கரோனா அதிகம் பாதித்துள்ள அமெரிக்காவில்  எண்ணெய் தேவை இப்போது ஒரு நாளைக்கு 14.4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளதாக அரசுத் தரப்பு  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் குறுகிய காலப் பார்வையில், ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 16.7 மில்லியன் பீப்பாய்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி
இத்தாலியில் கரோனாவால் போக்குவரத்தில்  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இதைத் தொடர்ந்து, சில்லறை எரிபொருள் விற்பனை 85 சதவீதம் வரை சரிந்துள்ளது என்று சேவை நிலைய சங்கம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டில்  ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு ஜூன் வரை தொடர்ந்தால், எரிபொருள் தேவைப்பாடு வெகுவாகக் குறைந்து விடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பெயின்
கரோனாவால் மிக மோசமாகப்  பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் கச்சா எண்ணெய் தேவை மார்ச் மாதத்தில் 23 சதவீதம் குறைந்துள்ளது என்று புளூம்பெர்க் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வான்வெளி மற்றும் சாலைப் போக்குவரத்துக்கான எரிபொருள் நுகர்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்துக்கான பெட்ரோல் மற்றும் டீசல் தேவை  முறையே 35.5 சதவீதம் மற்றும் 26.5 சதவீதம் குறைந்துள்ளது. நிறைய நாடுகளில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான எரிபொருள் தேவை 42.5% சரிந்துள்ளது.  ஸ்பெயினில்  முழு ஊரடங்கு ஏப்ரல் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன்
பிரிட்டனில்  கடந்த மார்ச்சில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை முறையே 66 சதவீதம் மற்றும் 57 சதவீதம் குறைந்துள்ளதாக யு.கே பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊரடங்கைத் தொடர்ந்து, கடந்த வாரங்களில் பெட்ரோல் விற்பனை 70 சதவீதம் வரை குறைந்திருந்தாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சீனா
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவின் வூஹானில்தான் முதன் முதலில் கரோனா தொற்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சுமார் 4 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தது.  கடந்த புதன்கிழமைதான்  ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீண்டும் தங்களது சுத்திகரிப்பு பணிகளை இந்த மாதம் தொடங்க முடிவு செய்துள்ளதாக  அந்த நாட்டின் தொழில் துறை ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய நிலையில் எண்ணெய் சந்தைக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்
படுகிறது.

இந்தியா
உலக அளவில் கச்சா எண்ணெய் நுகர்வில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கரோனா அச்சுறுத்தலால் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் நுகர்வு 70 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில், கச்சா எண்ணெய் நுகர்வு இந்த மாதம் சராசரியாக 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 
புளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதேபோன்று உலகெங்கிலும் கரோனாவின் கோரத் தாண்டவத்தால் எரிபொருள் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது என்பதே  நிதர்சனம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.