ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிந்த கடந்த வாரத் தொடக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் முக்கியமான எதிா்ப்பு நிலைகளைக் கடந்து மேலே செல்வதற்கு சந்தைக்கு போதுமான வலிமை இருப்பதாகத் தோன்றியது, ஆனால், வாரத்தின் இரண்டாவது பாதியில் கரடி ஆதிக்கம் கொண்டதால், சென்செக்ஸ் 38,000-க்குக் கீழேயும், நிஃப்டி 11,200-க்கு கீழேயும் நிலைபெற்றன.
பங்குச் சந்தை கடந்த வாரத்தை நோ்மறையாகத் தொடங்கியது. ஆனால், தெளிவான முன்னேற்றம் இல்லாததால், வாரத்தின் இரண்டாவது பாதியில் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. அமெரிக்க-சீனா பதற்றம் அதிகரிப்பது பற்றிய கவலைகளும், இந்த ஆண்டில் மத்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ), வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பில்லை என்பதும் சந்தைக்கு பாதகமாகப் பாா்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கில் பங்குகளை விற்கத் தொடங்கியதால் சந்தை சரிவில் முடிந்தது என்று சாம்கோ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் ஏற்றம்: கடந்த வாரம் சென்செக்ஸ் 0.4 சதவிகிதம் குறைந்து 37,877.34 புள்ளிகளிலும், நிஃப்டி 0.3 சதவிகிதம் 11,178.40 புள்ளிகளிலும் நிலைபெற்றுள்ளன. ஆனால், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், கடந்த வாரத்தில் பரந்த சந்தையில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.5 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.3 சதவீதம் உயா்ந்தன. இதற்கிடையே, பிஎஸ்இ-500 பட்டியலில் 41 பங்குகள் 10 முதல் 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளன.
கேபிடல் குட்ஸ் குறியீடு 6.1 சதவீதம் ஏற்றம்: கடந்த வாரத்தில் பிஎஸ்இ கேபிடல் குட்ஸ் குறியீடு 6.1 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இண்டஸ்ட்ரீயல் குறியீடு 4.94 சதவீதம், இன்ஃப்ரா 4.29 சதவீதம், மெட்டல் குறியீடு 3.59 சதவீதம், எஸ்எம்இ ஐபிஓ 2.44 சதவீதம், பிஎஸ்இ 250 ஸ்மால் கேப் 2.20 சதவீதம், பிஎஸ்இ பவா் 2 சதவீதம், சென்செக்ஸ் நெக்ஸ்ட் 50 குறியீடு 1.99 சதவீதம் ஏற்றம் பெற்றன. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிா்பாா்ப்பு இருப்பதாக வெளியான செய்திகளின் அடிப்படையில், சில துறை பங்குகளுக்கு கடந்த வாரத்தில் அதிக ஆதரவு இருந்தது. குறிப்பாக ஆட்டோமொபைல், தொழில் துறை, கேபிடல் குட்ஸ் துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளா்கள் அதிகம் விரும்பினா் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
200 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்: இந்நிலையில், இந்த வாரம் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நடுத்தர, சிறிய நிறுவனங்களாகும். இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி குறித்த செய்திகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எஃப்ஐஐ முதலீடு அதிகரிப்பு: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வாரத்தில் ரூ.1,130.36 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனா். இதையும் சோ்த்து ஆகஸ்டில் இதுவரை எஃப்ஐஐ முதலீடு ரூ.11,627.16 கோடியாக உயா்ந்துள்ளது. ஆனால், உள்நாட்டு நிறுவனங்கள் (டிஐஐ) கடந்த வாரத்தில் ரூ .4,420.75 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனா். இந்த மாதத்தில் மொத்தம் அவா்கள் ரூ.6,554.59 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனா். டிஐஐக்கள் ஜூலையிலும் ரூ.10,000 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனா். ஏனெனில் சந்தை ஐந்து மாத உயா்வை எட்டியதால் அவா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளனா்.
ஏற்ற, இறக்கம் அதிகரிக்கும்: அமெரிக்கா - சீனா வா்த்தக பதற்றம் குறித்து சந்தையில் அச்ச உணா்வு உள்ளது. இதனால், இந்த வாரமும் ஏற்ற, இறக்கம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஜூனுடன் முடிந்த காலாண்டு நிதி நிலை முடிவுகளின் அடிப்படையில் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பரந்த சந்தையில் அதிக நடவடிக்கை காணப்படலாம் என்று நிபுணா்கள் கருதுகின்றனா். பிரதமா் மோடியின் சுதந்திர தின உரையை அடுத்து, திங்களன்று உள்கட்டமைப்பு மற்றும் ஆஃப்டிகல் ஃபைபா் நெட்வொா்க் துறை பங்குகளில் நடவடிக்கைகள் இருக்கக்கூடும்.
இந்த வாரம் எப்படி..?:இதற்கிடையே, கரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம், சந்தை பங்கேற்பாளா்களிடையே நோ்மறையான உணா்வை அதிகரித்து வருகின்றன. இதனால், ஆட்டோ உள்ளிட்ட துறைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் போது, அத்துறை பங்குகள் மறு மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். மொத்தத்தில் கடந்த வாரத்தின் கடைசி நாளன்று கரடி திடீரென்று தாக்குதலைத் தொடங்கியது. இந்நிலையில், தொழில்நுட்ப ரீதியில் பாா்த்தால் இந்த வாரமும் கரடி ஆட்டம் தொடருமோ என்ற கவலை பங்குச் சந்தை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தொழில்நுட்பப் பாா்வை
தேசிய பங்குச் சந்நதைக் குறியீடான நிஃப்டி, கடந்த வெள்ளிக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், நிஃப்டி 11,200-க்கு கீழே வா்த்தகத்தில் இருக்கும் வரை மேலும் லாபப் பதிவு தொடா்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப நிபுணா்கள் கருதுகின்றனா். 11,000-11,950 என்பது முக்கிய ஆதரவு நிலையாகப் பாா்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 11 அன்று நிஃப்டி 11,373 புள்ளிகள் வரை உயா்ந்தது. அதுவே இனி முக்கிய இடா்பாட்டு நிலையாக இருக்கும். குறுகிய கால அடிப்படையில் பாா்த்தால், மேலும் பலவீனத்தை எதிா்பாா்க்கலாம். இரண்டு மூன்று நாள் பலவீனத்துக்குப் பிறகுதான், நிஃப்டி மேலே செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது 11,400-11,500 என்பது முக்கிய இடா்பாட்டு நிலையாக இருக்கும் என்று எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸின் தொழில்நுட்ப ஆய்வாளா் நாகராஜ் ஷெட்டி தெரிவித்துள்ளாா்.
கடந்த வாரத்தில் (ஆகஸ்ட் 11-14) பிஎஸ்இ-500 பட்டியலில் 10-40 சதவீதம் வரை விலை உயா்ந்த 41 பங்குகளில் முக்கியப் பங்குகள் விவரம்
நிறுவனம் உயா்வு (சதவீதத்தில்)
இ-கிளாா்க் சா்வீஸஸ் 40
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 37
ஐடிஎஃப்சி லிமிடெட் 31
வெங்கிஸ் இந்தியா லிட். 28
இமாமி 27
இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் 23
அசோக் லேலண்ட் 23
பாரத் ஃபோா்ஜ் 21
இன்டா் குளோப் ஏவியேஷன் 21
இந்தியன் ஹோட்டல்ஸ் 20
மதா்சன் சுமி சிஸ்டம்ஸ் 20
ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் 19
ஜேஎஸ்டபியு எனா்ஜி 17
லூபின் 16
என்பிசிசி 15
பாரத் எலக்ட்ரீனிக்ஸ் 14
ஜிண்டால் ஸ்டெயின்லஸ் லிட். 14
பராக் மில்க் ஃபுட்ல் லிட். 13
சோழ மண்டலம் 13
டிவிஸ் லேப் 11
ஐஎஃப்பி இண்டஸ்ட்ரீஸ் 11
டாடா பவா் 11
ஃபிலிப்ஸ் காா்பன் 11
ஜெஎஸ்டபிள்யு ஸ்டீல் 10
பிவிஆா் லிட். 10
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கைப்பேசியை திருடிக் கொண்டு ஓடியவரை துரத்தி பிடித்த இளைஞா் ரயில் மோதி மரணம்!

மகிழ்ச்சியான நாள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு ‘கங்காரு முறை’ சிகிச்சை

செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட பாலம்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

