பட்ஜெட் விலையில் சாம்சங் மொபைல்: கேலக்ஸி எஸ் 10 லைட்
சாம்சங் கேலக்ஸி எஸ் 10 லைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் வித்தியாசமான உத்தியைத் தேர்வு செய்துள்ளது.


சாம்சங் கேலக்ஸி எஸ் 10 லைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் வித்தியாசமான உத்தியைத் தேர்வு செய்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 20 வரிசை அறிமுகப்படுத்த ஒரு வாரத்துக்குச் சற்று முன்னதாக இதனை வெளியிட்டுள்ளது.
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 10 லைட், பயனர்களுக்கு சிறந்த வேகத்தையும் செயல்திறனையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில சமரசங்களுடன் கேலக்ஸி எஸ் தொடர் மொபைலை சந்தைப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். எனவே இது சாம்சங் தரப்பிலிருந்து ஒரு "மலிவுவான அறிமுகம்" எனலாம். இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 செயலி உள்ளது. மேலும் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது.
8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி போர்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டை மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ .39,999/- ஆகும்.

6.7 அங்குலம் அமோலெட் டிஸ்ப்ளேயுடன் இந்த மொபைல் ஸ்மூத்தாகவும் பெரியதாகவும் இருக்கும். இது விலையுயர்ந்த கேலக்ஸி எஸ் 10 + மற்றும் எஸ் 10 ஆகியவற்றின் கூறுகளைக் கொண்டுள்ளது.
இதன் மேல்புறத்தில் ஒரு பஞ்ச்-ஹோல் உள்ளது, இது ப்ரென்ட் கேமராவின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியது.
இந்த மொபைல் வரவிருக்கும் எஸ் 20 போலவே செவ்வக கேமரா பம்ப் வடிவமைப்புடன் உள்ளது. இதில் கண்ணாடிக்கு பதிலாக ஒரு "கிளாஸ்டிக்" ஐப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 10 லைட் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது: ஒரு நிலையான ஓ ஐ எஸ் கேமரா (48MP), அல்ட்ரா-வைட் (12MP) மற்றும் மேக்ரோ (5MP) சென்சார்களுடன் உள்ளது. இந்த மொபைல் 32 எம்.பி செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இதிலுள்ள சூப்பர் ஸ்டெடி ஓஐஎஸ் தொழில்நுட்பம், லென்ஸை விடியோக்களை கிம்பெல் போல நகரச் செய்யும். பயனரால் லென்ஸை மேல்நோக்கி, கீழ்நோக்கி மற்றும் இடது மற்றும் வலதுபுறமாக நகர்த்த முடியும். அதாவது இது விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் கேமராக்களில் நீங்கள் பெறக் கூடிய ஓஐஎஸ் வசதியைப் போன்றது.
8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஆன்-போர்டு சேமிப்பிடம் உள்ள இந்த மொபைலில் நீங்கள் மல்டி டாஸ்கிங் செய்ய முடியும். ஒரே நேரத்தில் விடியோக்களைப் பார்ப்பது, கேம்களை விளையாடுவது, படங்களை எடுப்பதுடன் இணையத்திலும் உலவலாம்.
மொபைலின் முக்கியமான கூறு இதன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆகும், இது 25W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இந்த பேட்டரி கேலக்ஸி எஸ் 10 + இன் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியை விட அதிகம்.
இந்த மொபைல் பிக்சல் பின்னிங்கைப் பயன்படுத்தி நான்கு பிக்சல்களை ஒன்றில் இணைத்து 12MP ஃபைனல் ரெலலூஷனுடன் படங்களை எடுக்கிறது. பகலில், தரமான படங்களை எடுக்க இத்தொழில்நுட்பம் உதவுகிறது. குறைந்த ஒளி நிலைகளின் போது, கேமராவின் லைட்டிங் சற்று அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 10 லைட் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்ஸை அதன் சொந்த ஒன் யுஐ 2.0-லிருந்து இயக்குகிறது.
இது பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர், எட்ஜ் ஸ்கிரீன், எட்ஜ் லைட்டிங், பிக்ஸ்பி வாய்ஸ், பிக்ஸ்பி வழக்கமான மற்றும் பவர்கீ கஸ்டமைசேஷன் போன்ற அம்சங்களைக் கொண்டுவருகிறது.
இந்த சாம்சங் மொபைல் வாட்டர் அண்ட் டஸ்ட் ஃப்ரூபை வழங்கவில்லை, இது பயனர்களுக்கு சிறு குறையாக இருக்கலாம்.
இறுதியாக, எஸ்-லைட் என்பது எஸ்-சீரிஸ் ஃபிளாக்க்ஷிப் ஸ்பெக்ஸின் முக்கியமான கூறுகளை பயனர்களுக்கு அளிப்பதன் மூலம் சாம்சங்கின் சிறந்த முயற்சியாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...