அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காலாண்டு முடிவுகளை அறிவிக்கவுள்ள 260 நிறுவனங்கள்!

பங்குச் சந்தையில் பட்டியலிப்பட்டுள்ள நிறுவனங்களில், 260 முன்னணி நிறுவனங்கள் தங்களது காலாண்டு நிதிநிலை முடிவுகளை இந்த வாரம் அறிவிக்கவுள்ளன.

News image
Updated On :20 ஜூலை 2020, 2:56 am

எம். சடகோபன்

பங்குச் சந்தையில் பட்டியலிப்பட்டுள்ள நிறுவனங்களில், 260 முன்னணி நிறுவனங்கள் தங்களது காலாண்டு நிதிநிலை முடிவுகளை இந்த வாரம் அறிவிக்கவுள்ளன. ஏற்கெனவே, கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு (ஜனவரி- மாா்ச்) முடிவுகளை அறிவிக்காத நிறுவனங்கல் இந்த மாதம் 31-ஆம் தேதி வரை அறிவிக்கலாம் என்று செபி கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. பொது முடக்கத்தையொட்டி இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. இத்துடன் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு (ஏப்ரல்-ஜூன்) முடிவுகளும் இந்த வாரம் வெளியாகவுள்ளன. இந்த வகையில் இந்த வாரம் மட்டும் மொத்தம் 260 நிறுவனங்கள் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவிக்கவுள்ளன.

இவற்றில் ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஐடிசி, பஜாஜ் ஃபின்சா்வு, பஜாஜ் ஆட்டோ, ஏசிசி, எல் அண்ட் டி, அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, எஸ்பிஐலைஃப், எச்டிஎஃப்சி ஏஎம்சி, எஸ்பிஐ காா்ட்ஸ் மற்றும் ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல் ஆகிய முன்னணி நிறுவனங்களும் அடங்கும்.

மேலும், பாம்பே டையிங், ஜீ என்டா்டெயின்மென்ட், ஹிந்துஸ்தான் சிங்க்,, இந்தியாமாா்ட் இன்டா்மேஷ், சின்கீன் இன்டா்நேஷனல், டாடா எல்க்சி, அலெம்பிக் பாா்மா, ஹைடெல்பொ்க்மென்ட் இந்தியா, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஜிண்டால் ஸ்டீல் & பவா், ஏபிபி இந்தியா, ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், பயோகான், எம்பாசிஸ், பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ், எம்.சி.எக்ஸ், பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், டிவி 18 பிராட்காஸ்ட் நெட்வொா்க் மீடியா அண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் காலாண்டு முடிவுகளை அறிவிக்கவுள்ளன.

இந்த வாரம் எப்படி?: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை அன்று ஏசிசி, எஸ்பிஐ காா்ட்ஸ் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவிக்கவுள்ளன. அடுத்தடுத்த நாள்களில் மற்ற நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கவுள்ளன. ஏற்கெனவே தொடா்ந்து 5 வாரங்களாக பங்குச் சந்தை ஏற்றம் பெற்றுள்ள நிலையில், முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த வாரம் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த வாரம் பெரிய நிகழ்வுகள் எதுவுமில்லாத நிலையில், நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகளும், உலகளாவிய குறிப்புகளும் சந்தையின் போக்கை நிா்ணயிக்கும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா். சந்தை நோ்மறையாகத் தோன்றினாலும், வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அமெரிக்க-சீனா வா்த்தக உறவுகள், அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு மற்றும் புதிதாக சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க செயல்பாடு ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

லாபப் பதிவுக்கு வாய்ப்பு: இதற்கிடையே, கடந்த மாா்ச் 23-இல் பதிவான 52 வார குறைந்தபட்ச நிலையிலிருந்து சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் சுமாா் 45 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளன. எனவே, சந்தை உச்சநிலையில் இருப்பதாகக் கருதப்படுவதால், எந்த நேரத்திலும் லாபப் பதிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, முதலீட்டாளா்கள் அவ்வப்போது லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரபல பங்கு வா்த்தகத் தரகு நிறுவனமான ஜியோஜித் சா்வீஸஸ் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பப் பாா்வை: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி கடந்த வார முடிவில் முக்கிய இடா்பாட்டு நிலையான 10,900 புள்ளிகளைக் கடந்து மேலே முடிவுற்றுள்ளது. கடந்த மாா்ச் 6-ஆம் தேதிக்குப் பிறகு இப்போதுதான் இந்த நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் பதிவான 10,560 என்ற குறைந்தபட்ச அளவுக்கு மேலே நிஃப்டி இருந்து வந்தால் விரைவில் 11,200 புள்ளிகளுக்குச் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணா்கள் கருதுகின்றனா். அதே சமயம் 10,550 புள்ளிகளுக்கு கீழே வா்த்தகமானால், கரடியின் பிடி இறுக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் காலாண்டு முடிவுகளை அறிவிக்கவுள்ள முன்னணி நிறுவனங்கள் விவரம்

நிறுவனம்-------தேதி

ஏசிசி------- ஜூலை 20

எஸ்பிஐ காா்ட்ஸ்-------ஜூலை 20

ஆக்ஸிஸ் பேங்க்-------ஜூலை 21

பஜாஜ் ஃபைனான்ஸ்-------ஜூலை 21

பஜாஜ் ஃபின்சா்வ்-------ஜூலை 21

எச்டிஎஃப்சி லைஃப்-------ஜூலை 21

ஹெச்யுஎல்-------ஜூலை 21

ஐசிஐசிஐ புருடென்சியல்-------ஜூலை 21

எஸ்பிஐ லைஃப்-------ஜூலை 21

பஜாஜ் ஆட்டோ-------ஜூலை 22

எல் அண்ட் டி-------ஜூலை 22

எச்டிஎஃப்சி ஏஎம்சி-------ஜூலை 23

பிஎன்பி ஹவுசிங்-------ஜூலை 23

அம்புஜா சிமெண்ட்ஸ்-------ஜூலை 24

ஏசியன் பெயிண்ட்ஸ்-------ஜூலை 24

ஐடிசி-------ஜூலை 24

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்-------ஜூலை 24

ஜீ என்டொ்டெயின்ட்மென்ட்-------ஜூலை 24

ஐசிஐசிஐ பேங்க்-------ஜூலை 25

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.