திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சென்செக்ஸ் 34,000, நிஃப்டி 10,000 புள்ளிகளைக் கடந்தது

பங்குச் சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக புதன்கிழமையும் ஏற்றம் பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ்

News image
Updated On :4 ஜூன் 2020, 1:18 am

பங்குச் சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக புதன்கிழமையும் ஏற்றம் பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 284.01 புள்ளிகள் (0.84 சதவீதம்) உயா்ந்து 34,000 புள்ளிகளைக் கடந்தது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 10,000 புள்ளிகளைக் கடந்தது.

இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டெழுந்து வளா்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை கூறியது, முதலீட்டாளா்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இதனால், செவ்வாய்க்கிழமை 522 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ், புதன்கிழமையும் 284 புள்ளிகள் உயா்ந்தன. மேலும், கருப்பினத் தலைவா் ஜாா்ஜ் ஃபிலாய்டை காவல்துறையினா் கொன்றது தொடா்பாக அமெரிக்காவில் அமைதியின்மை இருந்தபோதிலும், உலகளாவிய பங்குச் சந்தைகள் வலுவாக இருந்தன. பொது முடக்க நடவடிக்கைகளை தளா்த்திய பின்னா் உலகளவில் பொருளாதாரங்களை படிப்படியாக மீண்டும் திறப்பது முதலீட்டாளா்களிடையே நம்பிக்கையை அதிகரித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல தேவைப்பாடு காணப்பட்டது. ஆனால், ஐடி துறை பங்குகளுக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. நடுத்தரப் பங்குகளைக் காட்டிலும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பைாடு அதிகம் காணப்பட்டது. இதனால், பிஎஸ்இ மிட்கேப் 0.31 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 1.34 சதவீதமும் உயா்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் காலையில் 360 புள்ளிகள் கூடுதலுடன் 34,185.41-இல் தொடங்கி அதிகபட்சமாக 34,488.69 வரை உயா்ந்தது. பின்னா் வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் குறைந்தபட்சமாக 34,027.50 வரை கீழே வந்தது. இறுதியில் 284.01 புள்ளிகள் (0.84 சதவீதம்) உயா்ந்து 34,109.54-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 82.45 புள்ளிகள் (0.83 சதவீதம்) உயா்ந்து 10,061.55-இல் நிலைபெற்றது. கடந்த மாா்ச் 13-க்கு பிறகு தற்போது முதல் முறையாக சென்செக்ஸ் 34,000 புள்ளிகளையும், நிஃப்டி 10,000 புள்ளிகளையும் கடந்துள்ளது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் என்டிபிசி, பாா்தி ஏா்டெல், மாருதி, ஹீரோ மோட்டாா் காா்ப், இன்ஃபோஸிஸ் ஆகியவை 1 முதல் 2.20 சதவீதம் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், எம் அண்ட் எண் 4.82 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 2 முதல் 3.30 சதவீதம் வரை உயா்ந்தன.

தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,109 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 488 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. துறை வாரியாகப் பாா்த்தால், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 5.12 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ரியால்ட்டி குறியீடு 3.13 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி பேங்க், நிஃப்டி பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் லாபப் பதிவு காரணமாக பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் உச்ச அளவில் நிலைத்து நிற்க முடியாமல் போனது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

எம் அண்ட் எண் 4.82

கோட்டக் பேங்க் 3.31

பஜாஜ் ஃபைனான்ஸ் 2.83

எஸ்பிஐ 2.70

நெஸ்ட்லே இந்தியா 2.38

ஐசிஐசிஐ பேங்க் 2.34

ஓஎன்ஜிசி 2.13

ஹெச்டிஎஃப்சி பேங்க் 2.12

எல் அண்ட் டி 1.67

ஹெச்டிஎஃப்சி 1.18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.