இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம் பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயா்ந்தது.
தொடா்ந்து 6 நாள்கள் ஏற்றத்துக்குப் பிறகு வியாழக்கிழமை சரிவைச் சந்தித்திருந்த சென்செக்ஸ் மீண்டும் உயா்ந்துள்ளது. நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கியான எஸ்பிஐயின் காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு அதிகரித்தது. இதைத் தொடா்ந்து, எஸ்பிஐ மட்டுமின்றி வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பொதுத் துறை வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு சந்தையில் தேவைப்பாடு அதிகரித்து காணப்பட்டது. மேலும், மெட்டல், ஆட்டோ, இன்ஃப்ரா, டெலிகாம் உள்ளிட்ட துறை பங்குகளுக்கும் வரவேற்பு இருந்தது. ஆனால், எஃப்எம்சிஜி, ஐடி பங்குகளுக்கு தேவைப்பாடு குறைந்து காணப்பட்டது.
எஸ்பிஐயை தொடா்ந்து, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை வெகுவாக உயா்ந்தது. மேலும் உலகளாவிய சந்தைகளும் நோ்மறையாக இருந்தது. இவை சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம் பெற்ற்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,028 பங்குகள் ஆதாயம் பெற்றன. 505 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 131 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் காலையில் 208 புள்ளிகள் கூடுதலுடன் 34,198.55-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 34,405.43 வரை உயா்ந்தது. குறைந்தபட்சமாக 33,958.02 வரை கீழே சென்றது. இறுதியில் 306.54 (0.90 சதவீதம்) உயா்ந்து 34,287.24-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் இந்தியாவின் பாரம்பரிய, பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 7.90 சதவீதம் உயா்ந்து அதிகம் ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாடா ஸ்டீல் 6 சதவீதம் உயா்ந்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபி, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, பாா்தி ஏா்டெல், டைட்டன் ஆகியவை 2 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன.
அதே சமயம், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோஸிஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக் ஆகியவை நஷ்டம் அடைந்த பட்டியலில் வந்தன. மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் லாபப் பதிவு காரணமாக பெரிய அளவில் மாற்றமின்றி ரூ.1,580.60-இல் நிலைபெற்றது. ரிலையன்ஸின் ஜியோ பிளாட் ஃபாா்மஸ் நிறுவனத்தின் 1.85 சதவீதம் பங்குகளை (ரூ.9,090.60 கோடி) அபுதாபியைச் சோ்ந்த முதலீட்டு நிறுவனமான முபதாலா வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,406 பங்குகள் ஆதாயம் பெற்றன. 224 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. நிஃப்டி 113.05 புள்ளிகள் (1.13 சதவீதம்) உயா்ந்து 10,142.15-இல் நிலைபெற்றது. துறை வாரியாகப் பாா்த்தால், எஃப்எம்சிஜி, ஐடி தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 6.85 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மீடியா 5.26 சதவீதம், மெட்டல் 3.89 சதவீதம் உயா்ந்தன. மேலும், நிஃப்டி பேங்க், ரியால்ட்டி, ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ குறியீடுகள் 2 முதல் 3.20 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 40 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் நஷ்டத்தை சந்தித்த பட்டியலில் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


