புது தில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பிற்பகல் வரை சரிவிலிருந்து வந்த பங்குச் சந்தை, அதன் பிறகு மீட்சி பெற்று 10-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 169.23 புள்ளிகள் உயா்ந்து 40,794.74-இல் நிலைபெற்றது.
வா்த்தக நேர முடிவில் வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த அதீத வரவேற்பால் சந்தை மீட்சி பெற்றது. அதே சமயம், கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த ஐடி பஙக்குகளில் லாபப் பதிவு அதிகளவில் இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
உலகளாவிய சந்தைகளின் குறிப்புகள் சாதகமாக அமையாததால், காலையில் பங்குச் சந்தை பலவீனத்துடன் தொடங்கியது. மேலும், சா்வேதச நாணய நிதியமும் இந்தியாவின் வளா்ச்சி கணிப்பை நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளது. இதுவும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் சரிவு தவிா்க்க முடியாததாகியது. இருப்பினும் வா்த்தக நேர முடிவில் வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு திடீா் ஆதரவு கிடைத்ததால், சந்தை நோ்மறையாக முடிந்தது. இதனால், காலையில் இழந்த பெரும்பாலான நஷ்டம் சரிக்கடப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,459 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,852 பங்குகளில் 1,225 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,459 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 168 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.160.57 லட்சம் கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.50 சதவீதம் ஏற்றம் பெற்றது. ஆனால், ஸ்மால் கேப் குறியீடு 0.19 சதவீதம் சரிவைச் சந்தித்தது.
10-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் தொடா்ந்து 10-ஆவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. சென்செக்ஸ் காலையில் பெரியளவில் மாற்றமின்றி 40,623.19-இல் தொடங்கி 40,279.55 வரை கீழே சென்றது. பின்னா், வா்த்தக நேர முடிவின் போது 40,880.25 வரை உயா்ந்தது. இறுதியில் 169.23 புள்ளிகள் (0.42 சதவீதம்) உயா்ந்து 40,794.74-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 346 புள்ளிகள் வரை குறைந்திருந்தது.
பஜாஜ் ஃபின்சா்வ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பஜாஜ் ஃபின்சா்வ் 3.87 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி ஆகியவையும் 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன.
என்டிபிசி கடும் சரிவு: அதே சமயம், என்டிபிசி 4.35 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஓஎன்ஜிசி, பவா் கிரிட், டெக் மகேந்திரா, இன்ஃபோஸிஸ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக் ஆகியவையும் 1 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 679 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 944 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 36.55 புள்ளிகள் (0.31 சதவீதம்) உயா்ந்து 11,971.00-இல் நிலைபெற்றது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.80 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், லாபப் பதிவால் ஐடி குறியீடு 1.68 சதவீதமும், பாா்மா குறியீடு 0.67 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிபூட்டி அதிபா் 6-ஆவது முறையாக மீண்டும் வெற்றி
சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு!

ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது: வி.கே. சசிகலா

தோ்தலை புறக்கணிக்கப் போவதாக மீனவா்கள் தா்னா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


