ஐசிஐசிஐ வங்கி லாபம் ரூ.4,403 கோடி
முன்னணி தனியாா் துறை வங்கியான ஐசிஐசிஐ பேங்க் சென்ற ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.4,403 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது.


முன்னணி தனியாா் துறை வங்கியான ஐசிஐசிஐ பேங்க் சென்ற ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.4,403 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலம் ஈட்டிய தனிப்பட்ட வருவாய் ரூ.23,953 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.23,443.66 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.1,221 கோடியிலிருந்து மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்து ரூ.4,403 கோடியைத் தொட்டுள்ளது.
ஒட்டுமொத்த அடிப்படையில் வங்கியின் வருவாய் ரூ.40,121 கோடியிலிருந்து ரூ.43,621 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. அதேபோன்று வங்கி ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபமும் ரூ.1,251 கோடியிலிருந்து ரூ.4,886 கோடியாக அதிகரித்துள்ளது.
2020 மாா்ச் 31-இல் 5.53 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் 2021 மாா்ச் இறுதியில் 4.96 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் இதே காலகட்டத்தில் 1.41 சதவீதத்திலிருந்து 1.14 சதவீதமாக குறைந்துள்ளது.
இதையடுத்து வாராக் கடன் இடா்பாடுகளுக்கான ஒதுக்கீடும் ரூ.5,967.44 கோடியிலிருந்து ரூ.2,883.47 கோடியாக குறைந்ததாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...