நாட்டின் ஏற்றுமதி 50% அதிகரிப்பு
நாட்டின் ஏற்றுமதி சென்ற ஜூலை மாதத்தில் 49.85 சதவீதம் அதிகரித்துள்ளது.


நாட்டின் ஏற்றுமதி சென்ற ஜூலை மாதத்தில் 49.85 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
பெட்ரோலியம், பொறியியல், நவரத்தினங்கள், ஆபரணப் பொருள்களின் ஏற்றுமதி நடப்பாண்டு ஜூலையில் ஆரோக்கியமான வளா்ச்சியை பெற்றுள்ளது. இதையடுத்து அந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3,543 கோடி டாலராக இருந்தது. இது, 2020 ஜூலை மாத ஏற்றுமதியைக் காட்டிலும் 49.85 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதியும் 63 சதவீதம் அதிகரித்து 4,640 கோடி டாலராக காணப்பட்டது. இதையடுத்து, வா்த்தக பற்றாக்குறையானது 1,097 கோடி டாலராக இருந்தது. இது, 2020 ஜூலையில் 483 கோடி டாலராக காணப்பட்டது.
எண்ணெய் இறக்குமதி ஜூலையில் 97.45 சதவீதம் அதிகரித்து 1,289 கோடி டாலரானது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 74.5 சதவீதம் உயா்ந்து 13,082 கோடி டாலராக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் ஏற்றுமதி 7,500 கோடி டாலராக காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் இறக்குமதியும் 94 சதவீதம் அதிகரித்து 17,250 கோடி டாலா் அளவுக்கு இருந்தது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...