மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அந்நிய நேரடி முதலீடு 168% அதிகரிப்பு

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 168 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 11:07 pm

DIN

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 168 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 1,757 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.31 லட்சம் கோடி) இருந்தது. இது, கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடான 656 கோடி டாலருடன் (ரூ.49,200 கோடி) ஒப்பிடும்போது 168 சதவீதம் அதிகம் ஆகும்.

இதற்கு, மத்திய அரசு மேற்கொண்ட கொள்கை சீா்திருத்தங்களும், எளிதில் தொழில்தொடங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே முக்கிய காரணம்.

இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்த அந்நிய நேரடி முதலீடு வரத்து 2,253 கோடி டாலராக இருந்தது. இது, கடந்தாண்டு 1,184 கோடி டாலராக காணப்பட்டது. மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் பங்குகள் ஈா்த்த முதலீடு, மறு முதலீட்டு வருவாய் மற்றும் இதர மூலதனங்களும் அடக்கம்.

பங்குகளில் மேற்கொள்ளபட்ட மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் அதிகபட்சமாக 27 சதவீத பங்களிப்பை ஆட்டோமொபைல் துறை வழங்கியுள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்ததில் கா்நாடகம் 48 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடா்ந்து மகாராஷ்டிரம் (23 சதவீதம்), தில்லி (11 சதவீதம்) ஆகியவை உள்ளதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.