தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மீண்டும் கரடி ஆதிக்கம்: ஒரே நாளில் சென்செக்ஸ் 889 புள்ளிகள் சரிவு

வார இறுதி நாளான இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது..

News image

மீண்டும் கரடி ஆதிக்கம்: ஒரே நாளில் சென்செக்ஸ் 889 புள்ளிகள் சரிவு

Updated On :17 டிசம்பர் 2021, 11:41 am

வார இறுதி நாளான இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை இன்று பெரிய சரிவுடன் நிறைவடைந்திருக்கிறது.

நேற்று(டிச.16) 57,901.14 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,021.63 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 889.40 புள்ளிகள் குறைந்து  57,011.74 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

17,276.25 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 263.20 புள்ளிகள் சரிந்து 16,985.20 புள்ளிகளில் நிலைபெற்றது. 

மேலும் தொடர்ந்து ஏற்றமும் இறக்கமும் அடைந்து வருகிற பங்குச்சந்தையின்  சென்செக்ஸ் வார இறுதியில் பெரிய வீழ்ச்சியை அடைந்ததால் பங்குதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.