ஏற்றத்தில் பங்குச் சந்தை: 17,000 புள்ளிகளை நெருங்கிய நிஃப்டி
இரண்டாவது நாளாக இன்று பங்குச்சந்தை உயர்வில் நிறைவடைந்தது.


இரண்டாவது நாளாக இன்று பங்குச்சந்தை உயர்வில் நிறைவடைந்தது.
கடந்த வார இறுதியில் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்த நிலையில் இந்த வார தொடக்க நாளான நேற்று முன் தினம்( டிச.20) பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1200 புள்ளிகளை இழந்து பெரிய வீழ்ச்சியுடன் நிலைபெற்றதுடன் 9 லட்சம் கோடி அளவு சந்தை மதிப்பை இழந்ததாகவும் தகவல் வெளியானது. பின் நேற்று(டிச.21) பங்குகளின் மதிப்பால் ஏற்றத்துடன் பங்குச்சந்தை நிறைந்தவடைந்தது.
இந்நிலையில் இன்று ஐடி மற்றும் வங்கிப் பங்குகளின் விற்பனையால் பங்குச் சந்தை நிறைவுடன் முடிந்தது.
நேற்று(டிச.21) 56,319.01 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 56,599.47 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 611.55 புள்ளிகள் அதிகரித்து 56,930.56 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
16,770.85புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 16,865.55 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 184.60 புள்ளிகள் உயர்ந்து 16,955.45 புள்ளிகளில் நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...