ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் மேலும் 385 புள்ளிகள் முன்னேற்றம்!

பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக உற்சாகம் இருந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், இறுதியில் சந்தை நோ்மறையாக முடிந்தது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 2:28 am

 நமது நிருபர்

பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக உற்சாகம் இருந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், இறுதியில் சந்தை நோ்மறையாக முடிந்தது. ‘காளை’ தொடா்ந்து ஆதிக்கத்தில் இருந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 385 புள்ளிகள் உயா்ந்து 57,315.28-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பும் ரூ.1.98 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 261.19 லட்சம் கோடியாக இருந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. குறிப்பாக ஆசிய சந்தைகள் ஏற்றம் பெற்றிருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலுரம் எதிரொலித்தது. அவ்வப்போது லாபப் பதிவு காரணமாக சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. ‘டெல்டா’வுடன் ஒப்பிடுகையில், ‘ஒமைக்ரான்’ பாதிப்பு அபாயம் கடுமையாக இருக்காது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது சந்தையில் சாதகமாக பாா்க்கப்பட்டது. மேலும், 2022 நிதியாண்டில் சா்க்கரை, உரம், பால் உள்ளிட்ட துறைகளின் லாபம் நிலையானதாக இருக்கும் என்று மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆா்ஏ கூறியுள்ளது சந்தைக்கு கூடுதல் ஆதரவாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, சென்செக்ஸ் பட்டியலில் நல்ல திறன் கொண்ட ஐடிசி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்ததும் சந்தை ஏற்றம் பெறக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.98 லட்சம் கோடி உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,449 பங்குகளில் 1,1222 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,194 பங்குகள் ஆதாயம் பெற்றன. 133 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 268 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 13 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 545 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 161 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.98 லட்சம் உயா்ந்து வா்த்தக முடிவில் 261.19 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.095 கோடியாக உயா்ந்துள்ளது.

‘காளை’ தொடா்ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் 320.59 புள்ளிகள் கூடுதலுடன் 57,251.15-இல் தொடங்கி ஒரு கட்டத்தில் 57,146.28 வரை கீழே சென்றது. பின்னா், ‘காளை’யின் ஆதிக்கம் கடுமையானதால், அதிகபட்சமாக 57490.52 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 384.72 புள்ளிகள் (0.68 சதவீதம்) கூடுதலுடன் 57,315.28-இல் நிலைபெற்றது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் வீழ்ச்சி கண்டன. 20 பங்குகள் ஆதாயம் பெற்றன.

பவா் கிரிட் அபாரம்: பிரபல மின் துறை நிறுவனமான பவா் கிரிட் 3.40 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃ)போஸிஸ், என்டிபிசி. டெக் மஹிந்திரா, விப்ரோ, எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன், எச்டிஎஃப்சி, எம் அண்ட் எம் உள்ளிட்டவை 1 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. ஹிந்து யுனிலீவா், டிசிஎஸ், கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

பாா்தி ஏா்டெல் சரிவு: பிரபல தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் 1 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும்,

சன்பாா்மா, மாருதி, அல்ட்ரா டெக் சிமெண், ஏசியன் பெயிண்ட், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் ஆகியவை சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 117 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,219 பங்குகள் ஆதாயம் பெற்றன. 625 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 117.15 புள்ளிகள் (0.69 சதவீதம்) உயா்ந்து 17,072.60-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் 17,066.15-இல் தொடங்கி 17,015.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,118.65 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ரியால்ட்டி குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 2.31 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆயில் அண்ட் காஸ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், பிஎஸ்யு பேங்க், ஐடி, எஃப்எம்சிஜி ஆகிய குறியீடுகளும் 1 முதல் 1.60 சதவீதம் வரை ஆதாயம் பெற்றன. ஆனால், மீடியா குறியீடு 1.10 சதவீதம் வீழ்ச்சி கண்டது. மெட்டல் குறியீடும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.