புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக உயர்வுடன் தொடக்கம்

வாரத்தின் 2-வது நாளான இன்றும் (ஜூலை 6) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது.

News image
Updated On :6 ஜூலை 2021, 5:06 am

DIN

வாரத்தின் 2-வது நாளான இன்றும் (ஜூலை 6) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது.  கடந்த வாரம் முழுவதும் சரிவில் இருந்த நிலையில், நேற்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உயர்வுடன் முடிவடைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.76 புள்ளிகள் உயர்ந்து 52,891.76 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.051 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.90 புள்ளிகள் உய்ர்ந்து 15,853.25 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.13 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் 3.29 சதவிகிதமும், எச்டிஎஃப்சி வங்கி 1.25 சதவிகிதமும், டைட்டை கம்பெனி 1.07 சதவிகிதமும், இண்டஸ்இந்த் வங்கி 0.94 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.