பத்திரிகையாளர்கள் வணிக ரீதியிலான புதிய முயற்சிகளை செயல்படுத்த பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருந்து வணிக ரீதியான ஒரு புதிய செயல்திட்டத்தை வைத்திருந்தால் அதற்கு கூகுள் உதவி செய்யத் தயாராக உள்ளது என்று ஜிஎன்ஐ(GNI) ஸ்டார்ட்அப் தொடக்க முகாமின் இயக்குநர் பிலிப் ஸ்மித் கூறினார்.
2021 கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் (GNI) ஸ்டார்ட்அப் தொடக்க முகாமுக்கான விண்ணப்பங்கள் அமெரிக்கர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்திரிகைத் துறை சார்ந்த புதிய முயற்சிகளைத் தொடங்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்றும் இதில் 24 பேரை தேர்வு செய்து பயிற்சி வழங்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த கூகுள் உதவுகிறது.
இந்தத் திட்டத்துக்கான பயிற்சி செப்டம்பர் 7 முதல் நவம்பர் 5 வரை (ஒரு வார இடைவெளியுடன்) நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.
அமெரிக்கர்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் கனடா நாட்டினருக்கு அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெக

பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்..! ஆஸ்கர் மேடையில் ஹாலிவுட் நடிகரின் பேச்சு!

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்! விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடிக்கும் பணி தீவிரம்!

துபையில் டிரோன் தாக்குதல்: விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

