கூகுள் கணக்கு மூலம் எளிதாக டிவிட்டர் கணக்குக்குள் உள்நுழையும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, செயலிகளுக்குள் கூகுள் கணக்கு மூலம் எளிதாக உள்நுழைவதற்கு கூகுள் அனுமதி வழங்கி வருகின்றது. கூகுள் கணக்கு மூலம் உள்நுழைவதால், அடிப்படை தகவல்களான பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்டவை ஒவ்வொரு முறையும் நிரப்ப தேவையில்லை.
இவ்வளவு ஆண்டுகளாக டிவிட்டரில் இந்த முறை செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பதிவுபெறு, உள்நுழை விருப்பங்களுடன் மூன்றாவதாக கூகுள் கணக்கு மூலம் தொடரவும் என்ற விருப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் கணக்கு மூலம் தொடரவும் என்ற விருப்பத்தை தேர்வு செய்வதன் மூலம், பழைய கணக்குகள் கூகுள் கணக்குகளுடன் இணைக்கப்படும், புதிதாக தொடங்கப்படும் கணக்குகள் கூகுள் கணக்கு மூலம் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் எளிதாக டிவிட்டர் கணக்கை அனுக முடியும், கடவுச்செல்லை மட்டும் நினைவு வைத்துக் கொண்டால் போதுமானது.
இருப்பினும், கூகுள் கணக்கு சமரசம் செய்யப்பட்டால் டிவிட்டர் கணக்குகளும் சமரசம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒருமுறை கூகுள் கணக்கு மூலம் தொடங்கப்படும் டிவிட்டர் கணக்கு தடை செய்யப்பட்டால், மீண்டும் அதே கணக்கு மூலம் தொடர முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
குடும்ப பிரச்னை: மகனை கொலை செய்த தாய் தற்கொலை முயற்சி
சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

விவாகரத்து கோரும் விஜய் மனைவி சங்கீதா!

அவளை அதிகம் மிஸ் செய்தேன்.. விஜய் தேவரகொண்டா உருக்கம்!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

