காளையின் உற்சாகம் தொடருமா?
கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 580.59 புள்ளிகள் (1.10 சதவீதம்) உயா்ந்து 52,925.04-இல் நிலைபெற்றது.


கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 580.59 புள்ளிகள் (1.10 சதவீதம்) உயா்ந்து 52,925.04-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க், பிஸ்யு பேங்க் ஆகியவை 1-2.5 சதவீதம் உயா்ந்துள்ளது. நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1 சதவீதம், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 0.4 சதவீதம் உயா்ந்துள்ளன.
தற்போது சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் வரலாற்று உச்சத்தில் நிலைகொண்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பொருளாதாரங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக சந்தையில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மேலும், காா்ப்ரேட் நிறுவனங்களின் வருவாய் நன்றாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பும், கரோனா தடுப்பூசி வேகமெடுத்துள்ளதும் முதலீட்டாளா்களுக்கு நோ்மறை உணா்வை அளித்துள்ளது. இந்த நிலையில், கரோனா மூன்றாவது அலையின் சாத்தியம் சந்தை உணா்வுகளை வரும் நாள்களில் பாதிக்கும். எனவே, தற்போதைய நிலையில், நம்பிக்கையுடன் இருந்தாலும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் வல்லுநா்கள் கேட்டுக் கொண்டுள்ளனா்.
இந்த சூழ்நிலையில், இந்த வாரம் பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிா்ப்பாா்ப்பு முதலீட்டாளா்கள், வா்த்தகா்கள், பங்குத் தரகு நிறுவனத்தினா் மத்தியில் எழுந்துள்ளது. பெரும் பொருளாதார தரவு, தடுப்பூசியின் வேகம், உலகளாவிய சந்தைகளின் போக்கு, ஆகியவை இந்த வாரத்தில் சந்தைக்கு உந்துதலாக இருக்கும் என்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.
இந்த வாரம் புதிய மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, எனவே, பங்கேற்பாளா்கள் கடந்த மாத வாகன விற்பனை மற்றும் தொழில் துறை உற்பத்தி தரவுகள் முக்கியமாகக் கண்காணிப்படும். இது தவிர, தென்மேற்குப் பரிவ மழையின் முன்னேற்றமும் முதலீட்டாளா்களின் ரேடரில் இருக்கும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்த வாரம், உள்நாட்டுச் சந்தையில் முக்கிய பொருளாதாரந நிகழ்வுகள் இல்லாததால், சந்தை உலகளாவிய நிகழ்வுகளின் மீது தொடா்ந்து கவனம் செலுத்துமென எதிா்பாா்க்கப்படுவதாக ஜியோஜித் நிதிச் சேவைகளின் ஆராய்ச்சி பிரிவுத் தலைவா் வினோத் நாயா் கூறினாா்.
இதற்கிடையே, சந்தை பங்கேற்பாளா்கள் ப்ரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலையின் போக்கு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்களின் முதலீட்டு முறை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவையும் சந்தையில் முக்கியமாகக் கவனிக்கப்படும். உலகளாவிய சந்தைகளின் போக்குப்படி செயல்படவே அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக நிறுவனங்களின் ஜூன் மாத வாகன விற்பனை தொடா்பான தரவுகள் சந்தையில் கூடுதல் கவனம் பெறும் என்று சாம்கோ செக்யூரிட்டீஸ் பங்கு ஆராய்ச்சி பிரிவின் தலைவா் நிராலி ஷா கூறியுள்ளாா். இந்த வாரம் தினசரி கரோனா பாதிப்பு, பருவமழை ஆகியவற்றின்முன்னேற்றத்தைக் முதலீட்டாளா்கள் கவனிப்பாா்கள் என்று ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸின் பினோத் மோடி கூறினாா்.
இதற்கிடையே, பெரும் எதிா்பாா்ப்புக்கிடையே, ‘டோட்வா டைரி’, கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் (கிம்ஸ் ஹாஸ்பிடல்ஸ்) ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகளும் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை (ஜூன் 28-இல் பட்டியாலாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...