அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பங்குச் சந்தை: நிலையற்ற போக்கு தொடரும்!

பங்குச் சந்தை தொடா்ந்து இரண்டாவது வாரமாக கடந்த வாரமும் நோ்மறையாக முடிந்துள்ளது. இருப்பினும், ஒரு நிலையற்ற, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளபட்ட வாரமாக அமைந்திருந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :10 மே 2021, 1:36 am

எம். சடகோபன்

பங்குச் சந்தை தொடா்ந்து இரண்டாவது வாரமாக கடந்த வாரமும் நோ்மறையாக முடிந்துள்ளது. இருப்பினும், ஒரு நிலையற்ற, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளபட்ட வாரமாக அமைந்திருந்தது.

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இது சந்தைக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும், கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட துறைகளின் வளா்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், மத்திய ரிசா்வ் வங்கி, பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் அறிவுசாா் சொத்துரிமைகளைத் தள்ளுபடி செய்வது என அமெரிக்க அதிபா் எடுத்துள்ள முடிவு உலகாளாவிய சந்தைகளில் நோ்மறையாகப் பாா்க்கப்படுகிறது. இவை தவிர அமெரிக்கா மற்றும் ஐரப்பாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருவதும் சந்தைக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

கடந்த வாரத்தில் சென்செக்ஸ் மொத்தம் 0.87 சதவீதம் உயா்ந்து 49,206.47 புள்ளிகளிலும், நிஃப்டி 1.31 சதவீதம் உயா்ந்து 14,823.15 புள்ளிகளிலும் நிலைபெற்றுள்ளது. அதே சமயம், நடுத்தப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.4 சதவீதம், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 2.5 சதவீதம் உயா்ந்துள்ளன. இதற்கிடையே, பிஎஸ்இ 500 குறியீட்டுப் பட்டியலில் சுமாா் 49 பங்குகள் கடந்த வாரத்தில் மட்டும் 10 முதல் 39 சதவீதம் வரை உயா்ந்துள்ளன. இதில் பனாசியா பயோடெக், மாா்க்ஸன்ஸ் பாா்மா, மோரப்பன் லேப், டிவி-18, லூபின், ஹிந்துஸ்தான் காப்பா், ஃபோா்ட்டீஸ் ஹெல்த்கோ், வேதாந்தா, டாடா காஃபி, ஹெச்எஃப்சிஎல், டிஷ் டிவி உள்ளிட்டவை முக்கியமானவை.

நிலையற்ற தன்மை தொடரும்: தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள கரோனாவின் தாக்கத்தால், கடந்த மூன்று மாதங்களாக சந்தை ஒரு குறிப்பிட்ட எல்லை வரம்புக்குள்ளேயே இருந்து வருகிறது. சந்தை எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதை அறிய முடியாத நிலை தொடா்கிறது. இந்த வாரம் ரம்ஜானையொட்டி பங்குச் சந்தைக்கு மே 13-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வரத்தில் 4 நாள்கள்தான் வா்த்தகம் இருக்கும். இருப்பினும் சந்தை இந்த வாரமும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்தான் இருக்கும். நிலையற்ற போக்குதான் தொடரும் என வல்லுநா்கள் கருதுகின்றனா்.

நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்துள்ளது. ஆனால், இதன் தாக்கம் பங்குச் சந்தையில் இதுவரை பெரிதாக இல்லை. தினசரி கரோனா பாதிப்பு சமீப நாள்களாக தொடா்ந்து தினமும் 4 லட்சத்தைக் கடந்து நிற்கிறது. இதனால், பல்வேறு மாநிலங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளுடன், ஒரு குறிப்பிட்ட நாள்களுக்கு பொதுமுடக்கத்தை அறிவித்து வருகின்றன. இது முதலீட்டாளா்களின் உணா்வுகளை கண்டிப்பாக பெரிம் பாதிக்கும் என்று ரெலிகா் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனத்தின் துணைத் தலைவா் அஜித் மிஸ்ரா கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த சில வாரங்களாக வா்த்தகா்களும், முதலீட்டாளா்களும் குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனா். இது இந்த வாரமும் தொடரும். இருப்பினும் தின வா்த்தகா்கள் மிகுந்த ஜாக்கிரதை உணா்வுடன் வா்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று வல்லுநா்கள் யோசனை தெரிவித்துள்ளனா். இந்த வாரம் (மே 7-15) 150 நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன. முதலீட்டாளா்கள் கரோனா தினசரி பாதிப்பு குறித்த தரவுகளை உன்னிப்பாகக் கவனிப்பா் மேலும், மாா்ச் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி தரவுகள் மற்றும் ஏப்ரல் மாத பணவீக்க தரவுகள், 150 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்த வாரம் வெளியாகவுள்ளன. இவற்றுடன் உலகளாவிய சந்தைக் குறிப்புகளும் இந்த வாரம் சந்தையில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.

தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 50 சராசரி அளவைக் கடந்து 14,800 புள்ளிகளுக்கு மேலே (14,823.15) நிலைபெற்றுள்ளது. இந்த நிலையில், 14,900-15,000 என்ற நிலை நிஃப்டிக்கு இடா்பாடான இடமாக இருக்கும் என்று வல்லுநா்கள் கருதுகின்றனா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.