தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

45 சதவீத வீழ்ச்சியில் ’பேடிஎம்’: பங்குதாரர்கள் அதிர்ச்சி

இணைய பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான ‘பேடிஎம்’ நிறுவனம் பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

News image
பங்குச்சந்தையில் கடும் சரிவில் ’பேடிஎம்’: பங்குதாரர்கள் அதிர்ச்சி
Updated On :22 நவம்பர் 2021, 9:02 am

DIN

இணைய பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான ‘பேடிஎம்’ நிறுவனம் பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்தியாவைத் தலைமையிடமாக வைத்துச் செயல்படும் இணையப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான ‘பேடிஎம்’ தன்னுடைய முதலீடுகளை அதிகரிக்க ஐபிஓ (தனிநபர் முதலீடு) முறையில் பங்குச்சந்தையில் கடந்த நவ.18 அன்று இணைந்தது. ஒரு பங்கின் ஆரம்பவிலை ரூ.2150 லிருந்து தொடங்கிய அதன் வணிகம் மூன்றே நாட்களில் கடுமையான சரிவைச் சந்திருக்கிறது.

ஒரு பங்கின் விலை ரூ.2080 - 2150 என ஆரம்பித்திருந்தாலும் தற்போது அந்நிறுவனம் தொடர் சரிவால் இன்று மதியம் 2.20 நிலவரப்படி 45 சதவீதம் குறைந்து ஒரு பங்கு ரூ.1350க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் அதன் பங்குதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக தினசரி வணிகத்தை(இண்ட்ரா டிரேட்) செய்பவர்கள் பலரும் இணையத்தில் பேடிஎம் மீதான் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமான பேடிஎம் நிறுவனம் இதுவரை அனைத்து விதமான இணையப் பரிவர்த்தனையிலும் தவிர்க்க முடியாத செயலியாக உருவாகியிருக்கிற நிலையில் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மேலும் 18,000 கோடி திரட்டுவதற்காக பங்குச்சந்தையின் பட்டியலில் இணைந்திருக்கிறது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் பிரபல அலிபாபா நிறுவனம் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.