மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலை; நெருக்கடியில் சிக்கிய மக்கள்

தலைநகர் தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 35 காசுகள் உயர்ந்து முறையே ரூ.106.54க்கும், ரூ.95.27க்கும் விற்பனையாகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:25 am

DIN

தொடர்நது இரண்டாவது நாளாக, பெட்ரோல், டீசல் விலை வியாழக்கிழமையன்று உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த நிலையில், விலை ஏற்றப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 35 காசுகள் உயர்ந்து முறையே ரூ.106.54க்கும், ரூ.95.27க்கும் விற்பனையாகிறது.

அதே நிலையில், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.112.44 ஆகவும், டீசல் ரூ.103.26 ஆகவும் உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.61 ஆகவும், டீசல் ரூ.99.59 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.107.12 ஆகவும், டீசல் ரூ.98.38 ஆகவும் உள்ளது. கடந்த இரண்டு நாள்களாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் உயராமல் இருந்தது. ஆனால், அக்டோபர் 13 முதல் 16 வரை தொடர்ந்து 4 நாள்களும் தினமும் 35 காசுகள் என எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. 

தில்லியில் மட்டும் டீசல் விலை கடந்த 26 நாள்களில் 20 முறை மொத்தமாக ரூ.6.30 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து டீசல் விலை உயர்த்தப்பட்டுவருவதால், நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் வரலாறு காணாத அளவில் விற்கப்பட்டுவருகிறது. இதே போல், டீசல் விலையும் லிட்டா் 100 ரூபாயை தொடவுள்ளது. 

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே வருகிறது. சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் கிடங்கில் இருந்து பெட்ரோல், டீசல் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் நிலையங்களின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. 

எரிபொருள் கிடங்கில் இருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் போது அதற்கான பயணச் செலவும் பெட்ரோல், டீசலிலேயே சோ்க்கப்படும். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு ஏற்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை ஜூலை 17-ஆம் தேதி முதல் ஆக.13-ஆம் தேதி வரை உச்சபட்ச பெட்ரோல் விலை ரூ.102.49-ஆக இருந்தது.

இதைக் குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க உத்தரவிடப்பட்டது. அடுத்த நாளே அமலுக்கு வந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைந்து, ஆக. 14-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 99.47-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன் பின்னா் தொடா்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை, செப்.28-ஆம் தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. அந்த வகையில், புதன்கிழமை வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை அதிகரித்து, லிட்டா் ரூ.103.31-க்கு விற்பனையானது.

இதே போல், செப். 24-ஆம் தேதி முதல் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இதுவரை இல்லாத உச்சபட்ச விலையாக புதன்கிழமை லிட்டா் டீசல் ரூ.99.26-க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.