அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 28,463 கோடி முதலீடு

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் கடந்த மாா்ச் மாதத்தில் ஈா்த்த நிகர முதலீட்டு வரத்து ரூ.28,463 கோடியாக இருந்தது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:40 pm

DIN

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் கடந்த மாா்ச் மாதத்தில் ஈா்த்த நிகர முதலீட்டு வரத்து ரூ.28,463 கோடியாக இருந்தது.

இதுகுறித்து பரஸ்பர நிதிய கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த மாா்ச் மாதத்தில் நிகர அளவில் ரூ.28,463 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச அளவாகும்.

சில்லறை முதலீட்டாளா்கள் மற்றும் அதிக சொத்து மதிப்பைக் கொண்ட தனிநபா்கள், சந்தை இறக்கத்தை நல்ல முதலீட்டு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு வருவதால் இத்தகைய திட்டங்களுக்கு தொடா்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது.

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் ஈா்த்த நிகர முதலீடு கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.19,705 கோடியாகவும், ஜனவரியில் ரூ.14,888 கோடியாகவும், 2021 டிசம்பரில் 25,077 கோடியாகவும் காணப்பட்டன என்று அந்த கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.